செய்திகள்

அப்பாவி கிராம வாசிகளை அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய மக்கள் அதிகாரம் அமைப்பின் குண்டர்கள் : ஸ்டெர்லைட் விவகாரத்தில் வன்முறை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்ததை தொடர்ந்து ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் 3 பேர் குழுவை அமைத்தது.

இந்த குழுவினர் கழிவுகள் கொட்டப்படும் இடம், தாமிர உற்பத்தி நடைபெறும் இடம், ரசாயனக் கிடங்குகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பிரதிநிதிகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமவாசிகள் சந்தித்து மனு கொடுக்க முயன்றனர். மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணித்தரமாக வைத்திருந்தனர். குழந்தை குட்டிகளுடன் வந்திருந்த கிராம வாசிகளை மக்கள் அதிகாரம் மற்றும் இதர இயக்கங்களை சேர்ந்த குண்டர்கள், அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மனுவையும் கிழித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று 45,000 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அப்பாவி கிராம வாசிகளை தாக்கி மக்கள் அதிகாரம் குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி இருப்பது தூத்துக்குடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு பின்னையில் யார் செயல்படுகிறார்கள் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close