செய்திகள்

மதம் மற்றும் ஜாதி பெயருடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பேனர் : ஜாதியை ஒழிக்க பிறந்த தி.மு.க-வின் அசட்டு மௌனம்

பீகார் மாநிலம் பட்னாவில் வருமான வரி சவுராஹா பகுதியில் காங்கிரஸ் கட்சி பேனர் ஒன்றை வைத்துள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் புகைப்படம் இருக்கிறது. ஒவ்வொருவரின் புகைப்படம் அருகிலும் அவர்களின் மதம் மற்றும் சாதி பெயர் இடம் பெற்றுள்ளது.

#WATCH: A Congress poster identifying party leaders with their caste and religion seen at Patna’s Income Tax chowraha. #Bihar pic.twitter.com/jR4o7zI2g5

— ANI (@ANI) September 26, 2018

பகிரங்கமாக கட்சி தலைவர்களின் மதம் மற்றும் சாதி பெயர் கட்சியின் பேனரில் இடம்பெற்றுள்ளது இந்திய அரசியல் வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் துண்டு துண்டாக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டிருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் சாதியை ஒழிப்போம் என்று தினமும் கூக்குரல் இடும் தி.மு.க, தனது கூட்டணி கட்சி செய்துள்ள இந்த சாதி வெறி செயலுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காமல் அசட்டு மௌனம் காத்து வருவது, தி.மு.க-வின் போலி முகத்திரையை கிழிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close