பல ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்த  காங்கிரஸ் கட்சி, சர்வதேச தரத்திலான சுகாதாரத்தை  தருவதாக  ஒவ்வொறு தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதிகளை அளித்த போதும், அவர்கள் அதை செய்ததேயில்லை. இதன் காரணமாக இன்று நம் நாடு பொது சுகாதாரத்தில் மோசமான நிலையில் இருக்கிறது.  நம் நாட்டில் மருத்துவத்துறை என்பது தனியாரின் கரங்களிலும் மற்றும்  மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம் பெரும்பாலான ஏழை மக்களுக்கு இயல்பு விலையிலான சுகாதாரம் மறுக்கப்படுகிறது.

தேசிய சுகாதார கொள்கையின்படி , “63 மில்லியன்  மக்களுக்கு மேற்பட்டோர்  சுகாதார செலவுகளை மேற்கொண்டதால் மட்டுமே வறுமைநிலையை அடைந்திருப்பதாகவும், காரணம் பெரும்பாலான சுகாதாரத்தேவைகளுக்கு போதிய பொருளாதார பாதுகாப்பு இல்லை.”  ஏழ்மையான நிலையில் இருக்கும் மக்கள்  தரமான மருத்துவத்தை பெற வேண்டி தங்களின் உடமைகளான  நகைகளை விற்கிறார்கள் அல்லது அவர்களின் இடங்களை செளகார்களிடம் வைக்கிறார்கள், அதற்கு மாறாக  அவர்கள் பெரும் வட்டியையும் விதிக்கிறார்கள். மருத்துவ செலவீனங்களின் மீது நிகழும் செலவீனத்தின் பங்கு விகதம் ஓர் குடும்ப செலவின் ஒட்டுமொத்த மாதாந்திர செலவுடம் ஒப்பிடும் போது கிராமபுறங்களில் 6.9 % ஆகவும், நகர்புறத்தில் 5.5% ஆகவும் இருக்கிறது.

செப்டம்பர் 23 அன்று ஜார்கண்டில் மோடி அரசு “ஆயுஷ்மான் பாரத்” என்கிற திட்டத்தை நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 50 இலட்சம் மருத்துவ காப்பீடுகளை வழங்கவுள்ளது இதன் கீழ் மொத்தம் 50 கோடி மக்கள் பயன் பெற இருக்கிறார்கள். இது கிட்டதட்ட நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையின் 40 % ஆகும்.

இந்த “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் மொத்தம் 1,50,000 சுகாதார மையங்களை நாடெங்கிலும் நிறுவ உள்ளது அரசு.  இச்சுகாதார மையத்தின் கீழ் துணை மையங்கள், முதன்மை சுகாதார மையம் மற்றும் சமூக சுகாதார மையம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இவைகளே நாட்டு குடிமக்களின் அடிப்படை மருத்துவத்திற்கான முதல் நிலை தொடர்பு நிலையங்களாகும்.  இந்த திட்டத்தின்  மூலம் பயனடையவுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை சமூக பொருளாதாரத்தின் மூலமும் மற்றும் சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமும் மற்றும் 2011 ஆம் ஆண்டின் தரவை வைத்தும் கணிக்க இயலும்.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய பொது சுகாதார மருத்துவ காப்பீட்டு திட்டமாகும். மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஜெ.பி நாடா அவர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நிறுவுவதற்கான பணிகளை பார்வையிட ஜார்கண்ட் விரைந்துள்ளார்.  “ஜார்கண்ட் எப்போதுமே எங்களுக்கும்  பிரதமருக்கும் ஓர் சிறப்பான இடமாக விளங்குகிறது. காரணம் முக்கிய சுகாதார குறியீடுகளான தாய் இறப்பு விகிதம், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுற்றல் விகிதம் ஆகியவற்றில் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது ஜார்கண்ட். மேலும் இந்த இடத்திற்கு சுகாதாரம் தொடர்பான கவனமும் முக்கியமாக  இருக்கிறது.  எனவே தான் இத்திட்டத்தை இங்கே துவங்க திட்டமிட்டோம்” என நாடா தெரிவித்தார்.

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மத்திய அரசின் மருத்துவ திட்டத்தை விடவும் 20% குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சையை வழங்கும் மற்றும் ராஸ்ட்ரிய சுவஸ்தியா பீம யோஜ்னா திட்டமே அனைவரின் மனங்கவர்ந்த  “மோடிக்கேர் “ என புகழப்படுகிறது.

இந்து பூஷன், “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் முதன்மை நிர்வாகி  கூறுகையில் “CGHS மற்றும் ராஸ்ட்ரிய சுவஸ்த்தியா  பீமா யோஜ்னா வின் விலை பட்டியலே  மோடிக்கேர் திட்டத்தின் கீழ் விலைகளை நிர்ணயம் செய்வதற்காக அலசப்படுகின்றன. ஆனாலும் புதிய திட்டத்தின்  கீழ் உள்ள விலைகள் அனைத்தும் CGHS ஐ விட சராசரியாக 15-20% குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் பணியாளர்களுக்காக 1954 இல் மத்திய குடும்பம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டு தற்போதும் நடப்பிலிருக்கும் மருத்துவ திட்டம் தான் CGHS. அதே வேளையில் வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களுக்காக மன்மோகன் சிங் அரசு துவங்கிய திட்டம் RSBY.

மத்திய சுகாதார அமைச்சகத்திலிருந்து ஓர் அதிகாரி கூறுகையில், “1345 தொகுப்புகளுக்கான விலையை மத்திய அமைச்சகம் இறுதி செய்துள்ளது இது NHPS திட்டத்தின் கீழ் உள்ளடங்கும். இந்த தொகுப்புக்குள் இருதயவியல், கண் மருத்துவம், எலும்பியல், சீறுநீரக பிரச்சனைகள் மற்றும் புற்றுநோயியல் போன்ற 23 சிறப்பு நிபுணத்துவமும் உள்ளடங்கியுள்ளது.

12 மாநிலங்கள் இந்த காப்பீட்டு பாதையை தேர்வு செய்துள்ளன. இதன் மூலம் மாநில அரசு நிலையான ப்ரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தும், அந்நிறுவனம்  மருத்துவமனைக்கு செலுத்திவிடும். உத்திரகண்ட், ஹரியானா, நாகாலாந்த், திரிபுரா, மேகாலையா, குஜராத், கேரளா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தினுள் தற்போது இணைந்துள்ளன.  இந்த மாநிலங்கள் புதிய ஹைப்ரிட் நடைமுறையை செயல்படுத்த இருக்கின்றன. அதாவது ஒரு பாதி தொகை காப்பீட்டிற்காகவும் மீதி தொகையை அறக்கட்டளைக்கும் அளிக்க இருக்கிறது. அறக்கட்டளையின், மாதிரி ரசீதுகள் மீதான பணம் அரசங்கத்தாலேயே திரும்ப செலுத்தப்படும். மோடிக்கேர் சுகாதார கொள்கையில் இணையும் மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா போன்றவைகளுக்கு இதற்கு முன்னதாக இதுபோன்ற பெரிய மருத்துவத்திட்டம் இருந்ததில்லை எனவே அவர்கள் பெருமளவில் பயனடைவார்கள். தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், மற்றும் ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களுக்கென சுயத்திட்டங்கள் இருக்கின்றன ஆனால் அவை NHPS உடன் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. NITI Aayog இன் அறிக்கையின் படி NHPS இன் மொத்த மதிப்பு 120 பில்லியன் ஆகும். இதன் மூலம் ஓர் குடும்பத்திற்கான ப்ரீமியம் தொகை என்பது ரூபாய் 1000 யிலிருந்து 1200 க்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலான மாநிலங்களில் 60% மத்திய அரசும்  40% மாநில அரசும் செலுத்தும் . இதன் வகுப்பு விகிதம் 90:10 ஆக இருக்கும். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மூன்று ஹிமாலைய மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் மற்றும் உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் 100% நிதியை மத்திய அரசே அளிக்கிறது.

தி லான்செட், எனப்படும் பொது சுகாதார மருத்துவ நாளிதழ் இந்தியாவில் சர்வதேச தரத்திலான சுகாதாரத்தை நிறுவியதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு  புகழாரம் சூட்டியுள்ளது.  சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் அவர்கள் உணர்ந்திருக்கிறார், இது தனி மனித உரிமை என்பது மாத்திரமல்லாமல்,  இந்திய நடுத்தர மக்களிடையே வளர்ந்துவரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அவர் கையாண்ட ஓர் அரசியல் கருவி” என லான்செட் நாளிதழின் முதன்மை ஆசிரியர் ரிசார்ட் ஹார்டன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினால் சந்தையில் கடுமையான போட்டி நிலவி முன்னனி நிறுவனங்களும் தங்களின் சேவையை குறைந்த விலைக்கு தர முன்வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் கடைநிலை மனிதரும் பயன்பெறுவார் இது சிந்தனையாளரான பண்டிட் தீன் தயால் உபத்யாய் யின் நீண்ட நாள் கனவான “ஆண்டியோத்யா” வை   நிறைவேற்றுவதாக அமையும் .

Share