ஐக்கிய நாடுகள் சபை சார்பில் வெளியிடப்பட்ட, மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 130-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், மொத்தம் 189 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட, தற்போது ஒரு படி முன்னேறி 131-ல் இருந்து 130-வது இடத்தைப் பிடித்துள்ளது.

1990 முதல் 2017 வரையிலான கால இடைவெளியில் இந்தியாவின் பிறப்பு விகிதம் அதிகரித்தால் இதன் வளர்ச்சி மந்தமானது. இது தொடர்பாக, ஐ.நா கூறுகையில், இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது.

Advertisement

இந்திய நாடாளுமன்றத்தில் பெண்கள் 11.6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். 39 சதவிகித பெண்கள் மட்டுமே இரண்டாம் தர கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்; இதில் ஆண்கள் 64 சதவிகிதமாக உள்ளனர். பின்னர் கூலித் தொழிலிலும் ஆண்கள் 78.87 % மற்றும் பெண்கள் 27.27% உள்ளனர். இந்தியா இந்த பாகுபாடு இல்லாமல் முன்னேறினால்  விரைவில் 127-வது இடத்தைப் பிடித்து விடும்.

இந்த மதிப்பீடானது மூன்று வெவ்வேறான கோணங்களில் பட்டியலிடப்படுகிறது. நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வு, அனைத்தையும் அணுகும் அறிவுமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் என மூன்றும் முக்கியமானதாகும்.

Share