தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை கண்டித்து தமிழகம் முழுவது தி.மு.க-வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில் “ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்”. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் போசும் போது அருகில் நின்றுக் கொண்டு இருந்தவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை பறிகொடுத்த செல்வகணபதி என்பது தான். இந்த மேடையின் மேலே கொட்டை எழுத்துகளில் அ.தி.மு.க அரசின் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டம் என்று எழுதப்பட்டிருந்தது.

Advertisement

ஸ்டாலின் ஊழக்கு எதிராக பேசிய மேடையில் அவருக்கு வலதுபுறமாக நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பியாக இருந்தவர். சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கில் செல்வகணபதி குற்றவாளி என்று கடந்த 2014-ஆம் ஆண்டு சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்டது.

இதனால் அவரது எம்.பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. தற்போது செல்வகணபதி ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலக்கு எதிரான தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும் நடக்கும் முதல் ஆர்பாட்டத்தில் தனக்கு அருகே ஊழல் வழக்கில் தண்டனை பெற்று எம்.பி பதவியை இழந்த செல்வகணபதியை நிறுத்தி வைத்திருந்தது இவர்களின் ஊழல் ஒழிப்பு லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Share