தமிழ் நாடு

சுயநலம், விதண்டாவாதத்தின் மறு உருவம் ஈ.வெ.ராமசாமி என சாடி தி.மு.க-வை நிறுவிய அண்ணாதுரை, வாழ்நாள் முழுவதும் அண்ணா மீது வரம்பு மீறிய பிரச்சாரம் செய்த ஈ.வெ.ரா! #HBDDMK

1949 ஜூலை 9 அன்று நடந்த ஈ.வெ.ரா – மணியம்மை திருமணத்துக்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், திராவிடர் கழகத்திலிருந்து பலர் கூண்டோடு விலகி, புதிய கட்சி தொடங்கவிருப்பதை ஒரு முன்னறிவிப்புச் செய்வதுபோல 7-9-1949 அன்று அண்ணா வெளியிட்ட அறிக்கை கீழ் வருமாறு:

“நாம் போற்றி பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்கு தலைவரின்(ஈ.வெ.ரா.வின்) சுயநலம் கொண்டு போய்விட்டது. இனி அவரின் கீழ் இருந்து தொண்டாற்றுவதால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது சொந்த வயலுக்கு நாம் பாய்ச்சும் தண்ணீராகவே ஆகும் என்று கருதி, இவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணியிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழங்களும்(திராவிடர் கழகக் கிளைகள்), தோழர்களும், நிருவாகக் குழு உறுப்பினர்களும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்….

ஆனால் அவரது(ஈ.வெ.ரா) இலட்சியம் இயக்கத்தைப் பற்றி, அதன் வளர்ச்சியைப் பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ பார்ப்போம் என்ற விதண்டாவாத எண்ணமே அவரது போக்கில் தென்படுகிறது. எனவே அவராக விலகுவார் என நாம் எதிர்ப்பார்ப்பதற்கு இல்லை…

ஆகவே மேற்கொண்டு கழக ஆக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுதான் ஆக வேண்டும். இதில் இன்னும் நாள் ஓட்டக் கூடாது. நல்லதொரு முடிவு கண்டு நம் நாட்டுப் பணி மீண்டும் முன்போல் முழங்க வேண்டும்.

– அண்ணா’

பின்னர் 1949 செப்டம்பர் 18 அன்று மாலை அண்ணா தலைமையில் தம்மோடு திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சகாக்களின் துணையோடு திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட செய்தியை அறிவிக்கும் பொதுக் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்ஸ்ன் பூங்காவில் நடை பெற்றது.

ஈ.வெ.ராமசாமி தி.மு.க தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதில் இருந்தே, தி.மு.க வெற்றி பெற்றுவிடக் கூடாது என அல்லும் பகலும் அரும்பாடுபட்டவர். எந்த கட்சியை தாம் தமிழ்நாட்டில் இருந்து பூண்டோடு கிள்ளி எறியப் போவதாக சபதம் செய்துவிட்டு வெளியேறினாரோ, அந்தக் கட்சியான காங்கிரஸின் வெற்றிக்காகத் தமது உடல் உபாதைகளையும், வயது முதிர்ச்சியின் ஆயாசத்தையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸூக்கு ஆதரவாகவும் தி.மு.க-வுக்கு எதிராகவும் குறிப்பாக அண்ணா மீது பழிதீர்த்துக் கொள்வது போலவும் வரம்பு மீறிய வசைச் சொற்கள் மிகுந்த கடும் பிராசார பாணியைத் தேர்தல் காலங்களில் துரிதப்படுத்தியவர் ஈ.வெ.ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close