செய்திகள்தமிழ் நாடு

திருநெல்வேலியில் ஓடும் காரை துரத்தி 4 லட்ச ரூபாயை பறித்து சென்ற தி.மு.க பிரமுகர்! தொடரும் தி.மு.க-வினரின் அடாவடித்தனமும், ரவிடியிஸமும், கொள்ளைகளும் – #கொள்ளையடிக்கும்திமுக என கொதிக்கும் இணையவாசிகள்!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்தவர் லாரன்ஸ். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் சரக்குகளை ஏற்றி இறக்கும் ஒப்பந்தம் நடத்தி வருகிறார். ஊழியர்களுக்கான சம்பளம் நான்கு லட்சத்தை டிரைவர் நம்பிராஜிடம் அனுப்பி வைத்துள்ளார். நம்பிராஜ் காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் நோக்கி சென்ற போது, நாகல் நகர் ரவுண்டனா அருகே, ஒரு கார் மோதியுள்ளது. இதனால் நம்பிராஜ் க்கும், மோதிய காரில் இருந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமாதானத்திற்கு பின் காரை ஓட்டிய நம்பிராஜை, பின்தொடர்ந்து வந்த, அந்த கார் டிரைவர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத அரண்மனை குளம் பகுதியில் வழிமறித்து 4 லட்ச ரூபாயை பறித்து சென்றார்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் பணத்தை கொள்ளையடித்து சென்றவர் திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பவானிசங்கர் என தெரிய வந்தது. தி.மு.க பிரமுகராக உள்ள பவானி சங்கர் மீது வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இரவு நேரத்தில் தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பழநி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் குமாருடன் பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க-வினரின் தொடர் அடாவடித்தனத்தால் அதிர்ச்சியில் உள்ளனர் தமிழக மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close