பாரத பிரதமர் நரேந்திர மோடியின்  இலட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத்  திட்டம் உலகெங்கிலும் இருந்து பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. உலக சுகாதார அமைப்பின்  ஜெனரல் , பிரதமர் மோடி யின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை “பெரும் அர்ப்பணிப்பு” மிக்க திட்டமென புகழ்ந்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா (தேசிய சுகாதார பாதுகாப்பு) திட்டம். இது தற்சமயம் ஆட் சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சிறப்பு  திட்டங்களுள் ஒன்று. இத் திட்டத்தின் கீழ்  50 கோடி ஏழை மக்களுக்கு  அல்லது 10 கோடி குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரையில் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  “தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்” பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும்  வகையில்  செப்டம்பர் 25 அன்று நிறுவப்படும் என சுதந்திர தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருந்தார் .

இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதநொம் கேப்ரியெசுஸ் அவர்கள் இந்தியாவின் திட்டமான “ஆயுஷ்மான்  பாரத்” திட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அவர் பதிந்துள்ள ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இந்த திட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள உறுதிபாட்டை பெரிதும் போற்றியுள்ளார்.

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நாடா அவர்கள் அதநொம் அவர்களின்  ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாய் பதிந்துள்ள ட்வீட்டில்  “இத்திட்டத்தின் மூலம் மருத்துவ வசதியை அனைவரும் “எளிதில் அணுகக்கூடியதாகவும்  இயல்பான விலையில் பெறக்கூடியதாகவும்” மாற்றுவதே பிரதமர் மோடியின் நோக்கம் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற இருப்பதாகவும் இந்த எண்ணிக்கையானது அமேரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ நாட்டின் மக்கள் தொகைக்கு இணையானது எனவும் தெரிவித்துள்ளார்.

Share