இந்தியா விடுதலை பெற்று முதன் முதலாக உத்தரகாண்டை சேர்ந்த தமிழ் பற்றாளர் ஒருவரால் அனைத்திந்திய வானொலியில் ராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரம் பேசப்படுகிறது. பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருவள்ளுவருக்கான மாணவர் மற்றும் இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் அவர்கள், ஒரு தீவிர தமிழ் பற்றாளர்.

பிரதமர் மோடியின் தமிழ் பற்றால் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் பற்றிய சரத்திரத்தை வட இந்தியா முழுவதும் பரவ செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளார். 14 செப்டம்பர் (இன்று) இரவு 9.30 PM மணியளவில் அனைத்திந்திய வானொலி மையத்தின் இந்திரப்ரஸ்தா அலைவரிசையின் நேர்காணலில் கலந்து கொண்டு, ராஜேந்திர சோழன் பற்றிய  சரித்திரத்தை பற்றி பேச உள்ளார்.

தருண் விஜய் வைக்கும் கோரிக்கைகள்:

ராஜேந்திர சோழனின் நினைவை போற்றும் வகையில், அவருக்கு தேசிய தலைநகரான புது தில்லியில் சிலை நிறுவப்பட வேண்டும்.

ஒரு முக்கிய சாலைக்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்ட வேண்டும்.

ராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரத்தை பள்ளிக்கூட பாட புத்தகங்களில் சேர்த்து இந்தியாவின் தொன்மையான கடற்படைகளை பற்றிய சரித்திரத்தை பாட புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும்.

தருண் விஜயின் தமிழ் ஆர்வம்:

ராஜேந்திர சோழன் பற்றிய சரித்திரங்களை சேகரிக்கும் பணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் செய்யாத காரியத்தை, தமிழ் பெருமை என்று சுய-தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிட கட்சிகள் செய்யாததை தருண் விஜய் செய்துள்ளார். மத்திய அமைச்சரவையில் தேவையான இலாக்கக்களை கேட்டு கேட்டு பெற்று பல ஆண்டுகள் அங்கம் வகித்தும் இந்த முயற்சி கடுகளவு கூட செய்திடாத கட்சி தி.மு.க என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக பா.ஜ.க பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ள தருண் விஜய் சோழ மன்னர்களின் பெருமையை பற்றி ராஜ்ய சபாவில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இந்திய கடற்படைக்கு ராஜேந்திர சோழனின் திரு உருவ படத்தை வழங்கிய முதல் பாராளுமன்ற உறுப்பினரும் இவர் தான். மஹாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு விழாவில், ராஜேந்திர சோழனின் திரு உருவ படம், மஹாராஷ்டிரா முதல்வர் மற்றும் ஆளுநரின் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.

ராஜேந்திர சோழனின் திரு உருவமும், தமிழக பண்டைய கடற்படையின் புகழை பறை சாற்றும் வகையிலும் உள்ள படத்தை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் அளித்தார்.

ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழா மத்திய அரசால் கொண்டப்பட்டது. மேலும் ராஜேந்திர சோழனின் தபால் தலை மத்திய அரசால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தருண் விஜய்க்கு தமிழ் மீது இருக்கும் தீராத பற்றினால் வட இந்தியாவில் இவரை தமிழ் தருண் விஜய் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share