இந்தியா முழுவதும் 327 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக மத்திய சுகாதார துறை ஆணை பிறப்பித்துள்ளது. தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மத்திய சுகாதார துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட மருந்துகள் நச்சு தன்மை உடையதாக உள்ளது என தொழில்நுட்ப குழு அறிக்கை அளித்துள்ளது.

 

இதனையடுத்து இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் பற்றி மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மருந்துகள், வலி தீர்க்கும் மாத்திரைகள் ஆகியவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆய்வில் தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து சாரிடன், டாக்ஸிம் AZ, பன்ட்ரம் கீரிம், உள்ளிட்ட 327 மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த தடை விதிக்குமாறு சுகாதார அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. 2016 மார்ச் 10-ம் தேதி தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளில் 15 வகை மருந்துகள் 1988-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதிக்கு முன்பே உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதால் அவற்றுக்கு விலக்கு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Share