செங்கோட்டை மேலூரில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம் போல் மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. வீர விநாயகர் பக்தர்கள் சார்பாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் ஊர்வலம் நேற்று மாலை துவங்கியது. நேற்று இரவு 8 மணியளவில், வழக்கமான ஊர்வல பாதையான பள்ளிவாசலை அடுத்த பெரிய தெரு வழியாக அமைதியாக ஊர்வலம் நடைபெற்று கொண்டிருந்தது.

விநாயகரின் அமைதி ஊர்வலத்தை விரும்பாத 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மதவாதிகள், ஊர்வலத்தை வழி மறித்து தடுத்து நிறுத்தினர். விநாயகர் ஊர்வலம் இந்த வழியாக செல்லக் கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர்.

ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலை எதிர்பாராத காவல்துறையினர், இரு தரப்பினர் இடையே சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமூக பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஊர்வலத்தை அமைதியாக தொடர்வது என்று முடிவு எடுக்கப்பட்டு, ஊர்வலம் தொடர்ந்தது. இந்த அமைதி ஊர்வலத்தை விரும்பாத இஸ்லாமிய மதவெறியர்கள், ஏற்கனவே திட்டமிட்ட படி, கற்களை ஊர்வலத்தினர் மீது வீசி எறியத் துவங்கினர். இதனால் விநாயகர் சிலை சேதம் அடைந்தது. காவல்துறை உதவி ஆய்வாளர் தமிழ் செல்வனும் காயம் அடைந்தார். தொடர்ந்து, காவல்துறை தடியடி நடத்தியது.

இந்த இஸ்லாமிய மதவெறியர்களின் தாக்குதலில், ஊடக வாகனங்கள் உள்பட 60 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பிறகு, அனைவரையும் காவல்துறை கலைந்து செல்லும் படி வலியுறுத்தியது. பிறகு, இரவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பிறகு, நெல்லை டி.ஐ.ஜி கபில் சாரட்கர், நெல்லை எஸ். பி அருண் சக்திக்குமார் ஆகியோர் கலவர பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் ஊர்வலம் முடித்து வைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Pic Courtesy : Dhinasari

Share