தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தி.மு.க-வினர் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்து ஆடுவதை கண்கூடாக காண முடிகிறது. இதை தமிழ் கதிரில் தொகுத்து இருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான புதிய தலைமுறை செய்தி தொகுப்பில் பெரம்பலூரில் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கிய தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வீடியோ கடும் அதிர்ச்சி அளித்ததோடு தி.மு.க மீது மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதாக செயல்களில் இருந்து தி.மு.க ஓயவதற்குள் தற்போது வாட்ஸ் அப் செயலியில் பரவி வரும் ஆடியோ மற்றும் வீடியோவில் அரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் “அரசாங்கப் பணம் என்பது என் பணம்” என்று கூறும் உரையாடல்கள் பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோவில் அரசாங்க அதிகாரி ஊழல் செய்வதாக தி.மு.க எம்.எல்.ஏ குற்றம் சாட்டுவதும், அதை அந்த அரசாங்க அதிகாரி கடுமையாக மறுப்பது போன்றும் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தொடர் வன்முறையில் ஈடுபட்டு வரும் தி.மு.க-வின் செயல்கள் தமிழக மக்களை ஆழ்ந்த அச்சத்தில் மூழ்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சியில் இல்லாமலேயே இத்தனை வன்முறை செயல்களில் ஈடுபடும் தி.மு.க-வினர் ஒரு வேளை ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழகம் வன்முறை காடாகி விடுமோ என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

Share