நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா  வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில், தெருவோரத்தில் விநாயகர் சிலைகளை விற்பவர்களை காவல்துறையினர் வழிமறித்து, வழிபறித்து பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஏழை தொழிலாளர்களின் கை வண்ணத்தில் உருவாகி வழிபாட்டுக்காக விற்பனைக்கு தெருவோரத்தில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினர் வழிமறித்து -வழிபறித்து -பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது.வழிபாட்டுக்கு வழிவிடவேண்டும் களிமண் சிற்பிகளின் வயிற்றுப்பிழைப்புக்கும் அரசு வழிவிடவேண்டும்”, என்று கூறியுள்ளார்.

Share