பொதுவாக இந்துக்களின் பண்டிகைகளை சுதந்திரத்துடன்  கொண்டாட பல இடங்களில் பல சமயங்களில் இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, திராவிட கட்சிகள் ஆளும் தமிழகத்தில் அரை நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. அதிலும், விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் மிக ஆரவாரமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில், முக்கிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது காவல்துறையால் அனுமதி மறுக்கப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. இந்துக்களின் அடிப்படை மத சுதந்திரம் காவல்துறையால் பெரும்பாலாக நிராகரிக்கப்படுகிறது. இதற்கு இந்து விரோத அரசியல் சக்திகள் பின்னணியில் இருந்து செயல்படுவதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மேலப்புதூர் வேர்ஹவுஸ் பகுதியில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்துக்களின் அடிப்படை மத சுதந்திரம் பரிக்கப்படுவதை உணர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர், பாலக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து, தரையில் அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி மேலப்புதூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

Share