செய்திகள்

தந்தை மற்றும் சகோதரரால் ஆணவ கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய பெண் : இந்து இளைஞனை காதலித்ததால் கொடூரம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பர்பா பர்ட்வன் மாவட்டத்தில், இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து மதத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், அவரது தந்தை மற்றும் சகோதரரால் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், அந்த இஸ்லாமிய பெண்ணின் தந்தையும் சகோதரரும் பர்பா பர்ட்வன் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி, பர்ட்வானில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலத்திலிருந்து அந்த பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். போஸ்ட் மாட்டத்தின் போது, அந்த பெண்ணின் உடலில் இரண்டு எண்கள் பதியப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் காதலனை கண்டுபிடித்தனர் காவல்துறையினர்.

பின்னர் காவல்துறையினர் மும்பையில் உள்ள, அந்த பெண் காதலித்த இந்து இளைஞரின் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தேவையான அனைத்து விவரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார் அந்த இந்து இளைஞன். பிறகு, கொல்கத்தாவில் ஓட்டுனராக பணியாற்றிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த பெண்ணை கயிற்றை வைத்து இறுக்கி கொன்றதாக இருவரும் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். பின்னர் அவரது உடலை விவசாய நிலத்தில் புதைத்து விட்டு சென்றுவிட்டனர்.

இந்த கௌரவ கொலை சந்தேகமான வழக்கு என்பதால், அவரது கொலைக்கு பிற காரணங்களும் இருக்கிறதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஒரு இந்துவை, ஒரு இஸ்லாமிய பெண் தனது வாழ்கையாக தேர்ந்தெடுப்பதற்காக தன் குடும்ப உறுப்பினர்களால் மரண தண்டனையை அனுபவிப்பது இஸ்லாமிய பெண்களுக்கு இது முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் இந்துவை திருமணம் செய்த இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

Tags
Show More
Back to top button
Close
Close