வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மதிப்பீடுகளுக்கான லோக்சபா குழுவுக்கு ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தில், வங்கிகளின் வரா கடன் அதிகரிப்புக்கு, 2006-ஆம் ஆண்டு முதலே சூழ்நிலை உருவாகி விட்டதாக கூறியுள்ளார். கடன் பெற்றவர்களுக்கு கால அவகாசம் வழங்கி, கடன் வசூல் செய்வதில் வங்கிகள் சுணக்கம் காட்டியதாக அவர் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு ஊழல் புகார்களால் பல்வேறு விஷயங்களில் கடினமான முடிவுகள் எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியதால் கடன் வசூலும் பாதிக்கப்பட்டதாக ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். வங்கிகள் பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்த போதும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைக்கும் அன்றைய காங்கிரஸ் மன்மோகன் சிங் அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சியின் லீலகளை போட்டு உடைத்துள்ளார்.

Share