எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையின் அறிக்கை படி, ஜூலை மாதம் வரை  உத்திர பிரதேசத்தில் குற்றங்களின் எண்ணிக்கை வெகு அளவு குறைந்திருப்பதாக யோகி ஆதித்தியநாத் அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10,000 குற்றவாளிகளின் பிணை ஆணைகள்(Bail) ரத்து செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான பலாத்கார குற்றங்கள் கடந்த ஆண்டில் 2614-ஆக இருந்துள்ளது.  இவற்றை இந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றங்களின் எண்ணிக்கை 2,444-ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் காரணமாக , “நிகழ்த்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதலில் அச்சுருத்தல் நிறைந்த 63 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர், 650 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், பல குற்றங்களுக்காக நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த 3,430 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2018-ஆம் ஆண்டின் சமீபத்திய தரவின் படி 9866 குற்றவாளிகளின் பிணை ஆணை(Bail) ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தாமாகவே முன் வந்து நீதிமன்றத்தின் முன் ஆஜராகி சிறைக்கு சென்றுள்ளனர். 14,746 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கீழ் பதியப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு கிடைத்து வந்த அரசியல் அரண் அரவோடு அழிந்து போயுள்ளது. முதலீடுகளுக்கான புத்துணர்வு மிக்க சூழல் உருவாகியுள்ளதாக” உத்திர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சந்திர மோகன் கூறியிருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மாபெரும் நிர்வாக  சீரமைப்பை இந்த மாநிலம் கடந்த ஆண்டு மேற்கொண்டதன் விளைவாய், திறமை மிக்க அதிகாரிகளையும், காவல் துறையினரையும் தேர்வு செய்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சீர்செய்யும் விதத்தில் அவர்கள் சரியான இடத்தில் பணியிலமர்த்த பட்டனர் என ஏப்ரல் மாதத்தில் ஏபிபி நியூஸ் தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாவிலத்தில் யோகி ஆதித்யநாத் அவர்களின் சீர்மிகு தலைமையின் கீழ், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலமாக, கடந்த மார்ச் 2017 முதல் நடத்தப்பட்ட  ஏராளமான என்கவுண்டர் தாக்குதல்களின் மூலம் குறைந்தபட்சம் 30 குற்றவாளிகள் சுடப்பட்டுள்ளனர், என இந்த ஆண்டின் துவக்கத்தில் “தி ஹிந்து”  நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்ந்து எந்த முதலீட்டையும் ஈர்க்காமல் காட்டாட்சியில் இருந்த உத்திர பிரதேச மாநிலம் தற்போது பா.ஜ.க-வின் சீர்மிகு ஆட்சியாலும், யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்திறனாலும் விடியலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Share