தமிழ் நாடு

செல்போன் கடை உரிமையாளரை கொடூரமாக தாக்கி மண்டையை உடைத்த தி.மு.க நிர்வாகி – தமிழகத்தில் தொடரும் தி.மு.க-வினரின் அட்டூழியம்!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தானிப்பாடி கிராமத்தில் பேருந்து நிலையம் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் வாடிக்கையாளர், உரிமையாளர் இடையே நடைபெற்ற கைக்கலப்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மணிகண்டன் கடையில் தானிப்பாடியை சேர்ந்த கணேசன் என்பவர் செல்போனை சரி செய்யக் கொடுத்துச் சென்றார். கடந்த சனிக்கிழமை தண்டராம்பட்டைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ரகுபதி மாசிலாமணியுடன் அங்கு சென்ற கணேசன், செல்போனை வாங்கி விட்டு சரியாக வேலை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைக்கலப்பாக மாறவே, கணேசனும், ரகுபதி மாசிலாமணியும் சேர்ந்து உரிமையாளர் மணிகண்டனை தாக்கினர். இதில் அவரின் மண்டை உடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் கணேசன் மற்றும் ரகுபதி மாசிலாமணி ஆகிய இருவரையும் தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது முதல் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ள தி.மு.க-வினர், அதிர்ச்சியில் தமிழக மக்கள் என்ற கட்டுரையில் சமீபத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுத்திருந்தோம், இது தொடர் கதையாகி உள்ளதால் அதிர்ச்சியில் உள்ளனர் தமிழக மக்கள்.

Cover Pic & Input Credits – Polimer News

Tags
Show More
Back to top button
Close
Close