செய்திகள்

சாதி அரசியலை தூண்டுவதற்கு தான் மாணவி சோபியா பறக்கும் விமானத்தில் கூச்சலிட்டாரா ? அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடியை சேர்ந்த சோபியா, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்த வழக்கறிஞர் அதிசியக்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார் என்று டெக்கான் கிராணிக்கள் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

புதுக்கோட்டை காவல்துறையினரால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சோபியா, ஜாமினில் வெளிவந்துள்ளார். ஐ.பி.சி 290, 505 (1) (பி)  பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது செயல் “அரசியல் உந்துதலாக” இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறை காவல்துறையினர் நிராகரிக்கவில்லை.

டெக்கான் கிராணிக்கள் அறிக்கையின் படி, அவர் தலித் (தேவேந்திர குல வேலாள) சமூகத்தை சேர்ந்தவர் என்றும் தலித் மக்களுக்கு எதிரான கோபத்தை பா.ஜ.கவுக்கு எதிராகத் திசைதிருப்பும் ஒரு சூழ்ச்சியாக இருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை அவர்கள் தென்காசியில் ஏராளமான தலித் (தேவேந்திர குல வேலாள) மக்களை கட்சியில் இணைத்துக்கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் முனைவர் பட்ட படிப்பை படித்து வரும் சோபியா, சமீபத்தில் ஸ்டெர்லைட் பிரச்சினை மற்றும் சென்னை-சேலம் எட்டு-வழி நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை விரிவாக, ஒரு எழுத்தாளராக ஊடக வலைதளங்களில் எழுதியுள்ளார்.

இதற்கிடையில், சோபியாவின் ட்விட்டர் நடவடிக்கையை கண்காணிக்கும் போது, ஐந்து நகர்ப்புற நகசல்களை புனே காவல்துறையினர் கைது செய்ததை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அரசியல் காரணத்திற்காக தான், பறக்கும் விமானத்தில் சட்ட விரோதமாக மாணவி சோபியா கூச்சலிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close