செய்திகள்

ராகுல் காந்தி மற்றும் சீதாராம் யெச்சூரிக்கு கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் ஆர். எஸ். எஸ் : கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் ஆர். எஸ். எஸ்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம் – ஆர்.எஸ்.எஸ்., கண்ணோட்டம்’ என்ற பெயரில், செப்டம்பர் மாதம், மூன்று நாள் கருத்தரங்கம் டில்லியில் நடத்தப்பட உள்ளது. இந்த கருத்தரங்கில் பங்கேற்கும் படி, காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல், மார்க்., கம்யூ., பொதுச் செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் அமைப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட, சமூக மற்றும் கலாசார அமைப்பு என, ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து கூறி வருகிறது. அதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்தக் கருத்தரங்கை, ஆர்.எஸ்.எஸ்., பயன்படுத்தியுள்ளது.

இது குறித்து அமைப்பின் தலைமை பிரசாரக், அருண் குமார், கூறியதாவது: “உலகின் மிகவும் தனிச்சிறப்புள்ள, சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. அதே நேரத்தில், நம்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்தும், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்தும், இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கண்ணோட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை, அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேச உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி தான், காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்., கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்”, என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் முயர்ச்சியாக ஆர். எஸ். எஸ் இதை செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close