கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் பாதித்த குடகு மாவட்டத்தில் ராணுவத்தின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், கர்நாடக அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார். ஒரு கட்டத்தில் அதிகாரிகளை சந்திக்க போதிய நேரமில்லாததால் செய்தியாளர் சந்திப்பை முடிக்குமாறு நிர்மலா சீதாராமனிடம் கர்நாடக அமைச்சர் மகேஷ் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து பாதுகாப்பு துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நிகழ்ச்சி நிரலை தாம் முறையாகப் பின்பற்றுவதாகக் கூறியதுடன், அதிகாரிகள் முக்கியமானவர்கள் என்றால், தனக்கு தனது பரிவாரமும் (ராணுவ வீரர்கள்) முக்கியம் என்று குறிப்பிட்டார்.

ராணுவ வீரர்களை தனது குடும்பம் என்று குறிப்பிடும் வகையில், “எனது பரிவார்” என்று மத்திய அமைச்சர் கூறியதை திரித்து போலி செய்தியை வெளியிட்டுள்ளது சன் நியூஸ். சன் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,​”சங்பரிவாரே தனக்கு முக்கியம்” கர்நாடக அமைச்சருடன் #நிர்மலா சீதாராமன் வாக்குவாதம்”, என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஊடகங்களில் இது போன்று வெளியான செய்தி உண்மை இல்லை. மத்திய அமைச்சர் ராணுவ அதிகாரிகளை தான் பரிவார் என்று குறிப்பிட்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Press Release by Raksha Mantri

அதற்கு பிறகும், செய்தியை திருத்தாமல் அப்படியே விட்டுவிட்டது சன் நியூஸ். இதனை தொடர்ந்து, இந்த போலி செய்தியை தி.மு.க ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

தி.மு.க ஆதரவு தொலைக்காட்சி என்று பெயர் பெற்ற சன் நியூஸ் தொலைக்காட்சி தற்போது, பொய் செய்திகளை வெளியிடும் யுக்தியை கையில் எடுத்திருப்பது ஊடகவியலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த போலி செய்தியை வெளியிட்டதற்கு சன் நியூஸ் தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்குமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Share