ஊடக பொய்கள்

₹700 கோடி UAE உதவியதற்கு நன்றி தெரிவித்தாரா பிரதமர் மோடி? மோடியின் நன்றி ட்விட்டை திரித்து போலி செய்தி பரப்பும் போராளிகள்!

ஐக்கிய அரபு அமீரகம் ₹700 கோடியை நிதியாக கேரளாவிற்கு தர விருப்பம் தெரிவித்ததாக வெளியான செய்தி ஆதிகாரபூர்வமற்ற தகவல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான UAE  தூதர் Ahmed Albanna, அதிகாரபூர்வமாக இன்னும் UAE அரசு 700 கோடி அறிவிக்கவில்லை என்றும், இதற்கான எந்த நிதி தொடர்பான அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை’ என்றும் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் கதிர் இணையதளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது, இது போலி செய்தி இல்லை என்றும், பிரதமர் மோடி அவர்களே ₹700 கோடி நிதியை ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்ததற்கு மன்னருக்கு நன்றி தெரிவித்தார் என்று அவரது ட்விட்டை ஆதரமாக காட்டுகின்றனர் போலி போராளிகள்.

ஐக்கிய அரபு அமீரகம் மன்னருக்கு நன்றி தெரிவித்தார் ட்வீட் இது தான்.

இந்த ட்வீட் எதற்காக பிரதமர் மோடி அவர்களால் பதியப்பட்டது இங்கு முக்கியமாகிறது. போலி போராளிகள் சொல்வது போல் ₹700 கோடி நிதியை ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்ததற்கு பிரதமர் இந்த நன்றியை தெரிவிக்கவில்லை.

மாறாக அதே ஆகஸ்ட் 18-ஆம் தேதி அதிகாலை(இந்திய நேரப்படி) மன்னர் கேரளாவுக்கு இயன்ற உதவியை அளிக்குமாறு வேண்டி ஒரு ட்விட்டை வெளியிட்டார்.

இந்த நல்லெண்ணத்திற்காக பிரதமர் நன்றி தெரிவித்தாரே தவிற ₹700 கோடி நிதியை அளித்ததற்காக இல்லை. மாறாக, மன்னர் பதிவு செய்த ட்விட்டிலோ, பிரதமர் பதிவு செய்த நன்றி ட்விட்டிலோ ₹700 கோடி குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளை திரித்து வெளியிடும் போராளிகளின் குட்டு தற்போதெல்லாம் சிறிது நேரத்திலேயே அம்பலப்படுவது அவர்களுக்கு அவலம் தான்.

Tags
Show More
Back to top button
Close
Close