தமிழ் நாடு

15.95 லட்சம் சேமிப்புக் கணக்குகள், ₹2,940 கோடி முதலீடு : செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள தமிழகம்

சுகன்யா சம்ருதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை, 2015-ம் ஆண்டு முதல் மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் அதிக சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. இதுவரை 15.95 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ₹2,940 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று விகடன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் அஞ்சலகத்தில் குறைந்த பட்சம் ₹250 முன்பதிவு செய்து கணக்கை துவங்கலாம். ஒவ்வொரு வருடமும் 8.5% வட்டித்தொகை இந்த கணக்கில் இணைந்துக் கொண்டே வரும். பெண் பிள்ளைகள் 10ஆம் வகுப்பு படிக்கும் போது 50% பணத்தை எடுத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 18 வயதுக்கு பின் எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது ஓராண்டிற்கு ₹250 நிதி தொகையை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

 • 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கை துவங்க முடியும்.
 • ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கை துவங்கலாம்.
 • ஒவ்வொரு வருடமும் குறைந்தது ₹250 முதிலீடு செய்ய வேண்டும்; அதிகபட்சமாக ₹1.5லட்சம் முதலீடு செய்யலாம்.
 • அருகில் இருக்கும் எந்த அலுவுலகத்திலும் இக்கணக்கை துவங்கலாம்.
 • வருடம் 8.5% வட்டித் தொகை கணக்கில் இணையும்
  பதிவு செய்ததில் இருந்து 15 வருடம் வரை கணக்கை இயக்கலாம்.
 • 10ஆம் வகுப்பு படிக்கும் போதோ அல்லது 18 வயதுக்கு பின்னரோ கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம்.
 • திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பாக திருமண செலவுக்கு மொத்த பணத்தை எடுத்துவிட்டு கணக்கை மூடலாம்.
 • முறையாக சொன்ன தொகை செலுத்தபடவில்லை என்றால் வெறும் 4% வட்டி மட்டுமே பெற முடியும்.
 • இந்த சேமிப்பு திட்டத்திற்கு வரிவிலக்கு உண்டு.
 • கணக்கை பாதியில் விட்டால் ₹50 செலுத்தி மீண்டும் தொடரலாம்.
 • 21 வயது நிறைவடைந்த உடன் கணக்கு முதிர்வடைந்து விடும், அதன் பின் வட்டி கணக்கில் இணையாது.

சேமிப்புக் கணக்கைத் தொடங்குவதற்கு, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் போன்றவை அவசியம். கணக்கைத் தொடங்கிய பிறகு ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தைத் தொடங்கியபோது ₹1,000 சேமிக்க வேண்டும் என்று இருந்தது. இதனால், இந்தத் திட்டத்தில் சேர நிறைய பேர் தயங்கினர். பிறகு, குறைந்தபட்சம் ₹250  சேமிப்புத்தொகையாகச் செலுத்தினால் போதும் என மாற்றியமைத்தது மத்திய அரசு. இந்த மாற்றத்துக்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் ஏராளமானவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தத் திட்டத்தைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் சேமித்து வருவதன் மூலம் பெண்ணின் திருமணத்திற்கும், உயர் கல்விக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும். 21-வது வயதில் கணிசமான தொகை கிடைக்கும்.

கடந்த ஜூன் மாதத்தின் முடிவில் தமிழகத்திலிருந்து 15.95 லட்சம் பேர் செல்வமகள் சேமிப்புக்கணக்குத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சேமிப்புக்ணக்கில் ₹2,940 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் 15.09 லட்சம் சேமிப்புக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ₹1,288 கோடி டெபாசிட் செய்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close