ஊடக பொய்கள்

பிரதமர் மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு ₹35 லட்சம் செலவு என போலி செய்தி வெளியிட்ட விடுதலை, தீக்கதிர் மற்றும் ஒன் இந்தியா ஊடகங்கள். போலி செய்திகளின் புகலிடமா இவை?

விடுதலை, தீக்கதிர், ஒன் இந்தியா போன்ற ஊடகங்களுக்கு போலி செய்திகள் வெளியிடுவது புதிதல்ல. அதிலும் குறிப்பாக விடுதலை பத்திரிக்கை திராவிடர் கழகத்தாலும், தீக்கதிர் பத்திரிக்கை கம்யூனிஸ்ட் கட்சியாலும் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ இதழ்கள்.

இந்த இதழ்களுக்கு ஊடக தர்மம் என்பது என்றுமே இருந்தது இல்லை. தங்கள் கட்சிக்கும், கொள்கைக்கும் எதிர் துருவங்களில் இருக்கும் கட்சி மீதும் கட்சியினர் மீதும் சகட்டுமேனிக்கு போலி செய்திகளை எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கண்மூடித்தனமாக பரப்புவது இவர்களின் கைதேர்ந்த தொழில்.

பல முறை இவர்களின் போலி செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டு மூக்குடைக்கப்பட்டாலும், போலி செய்திகளை பரப்புவதையே தங்களின் தலையாய கடைமையாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்த மூன்று ஊடகங்களும் ஒரு ஆங்கில வலைதள போலி செய்தியை அடிப்படையாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட பிட்னஸ் வீடியோவுக்காக மட்டும் ₹35 லட்சம் செலவிடப்பட்டு இருப்பதாக போலி செய்திகளை வெளியிட்டு இருந்தனர். இதை கடுமையாக பரப்புரையும் செய்தனர்.

இது போலி செய்தி என்பது இவர்களுக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தங்கள் தலையாய பொய் பரப்பும் கடைமையை செப்பனே செய்தனர்.

தற்போது மீண்டும் ஒரு முறை மூக்குடைக்கப்படும் விதமாக இந்த செய்தி முற்றிலும் போலி என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு ரூபாய் கூட இந்த வீடியோவிற்காக செலவு செய்யப்பட வில்லை என அதிகாரப்பூர்வமாக தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னாவது தீக்கதிர், விடுதலை மற்றும் ஒன் இந்தியா ஊடகங்கள் தங்கள் தவறான செய்திக்கு மன்னிப்பு தெரிவிப்பார்களோ அல்லது இது போன்று மீண்டும் போலி செய்திகளை பரப்பாமல் இருப்பார்களோ என்று எண்ணினால் நீங்கள் முட்டாள்களே; மக்கள் மத்தியில் நற்பெயர் பெற லாயகற்ற இவர்கள், மக்களால் நிராகரிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் இவர்கள், பொய்களை பரப்பி அவதூறு ஏற்படுத்துவது மட்டுமே தற்போது கையில் இருக்கும் ஆயுதம்.

களத்தில் ஏற்கனவே மக்கள் இந்த தீயசக்திகளை நிராகிக்கப்பட்ட இவர்கள் விரைவில் இணையத்தில் முழுமையாக நிராகைக்கப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தீக்கதிர் போலி செய்தி இணைப்பு

விடுதலை போலி செய்தி இணைப்பு

ஒன் இந்தியா போலி செய்தி இணைப்பு

Tags
Show More
Back to top button
Close
Close