இந்தியா

உங்கள் கைகளில் ஸ்மார்ட் போன்கள்? நினைவுகூறுங்கள் வாஜ்பாய் அவர்களை!

ஸ்மார்ட் போன்கள் இன்றைய உலகின் அதி அத்யாவசிய தேவைகளுள் ஒன்று. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் நம் நாட்டின் பிரதமராக இருந்த போது நிறைவேற்றிய தொலைதொடர்பு கொள்கையின் மூலமே இன்று இந்த அலைபேசிகள் நம் மீது பெரும் உறுதியை பீடித்திருக்கின்றன.

1995-ஆம் ஆண்டில் நரசிம்ம ராவ் அவர்களின் ஆட்சியில் முதல் அலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போது தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த சுக்ராம் அவர்கள் மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் ஜோதி பாசு அவர்களுக்கு முதல் அழைப்பை விடுத்தார். ஆனால் இவர்கள் உருவாக்கிய தொலைதொடர்பு துறை கொள்கைகள் எதுவும் அலைப்பேசி சாதனத்திற்கு போதுமான எந்தவொரு உந்துதலையும் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஆனால் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவின் தொலைதொடர்பு துறையை சீரமைக்கும் பணியை மறைந்த அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் ஒப்படைத்தார். அதன் மூலம் புதிய தொலைதொடர்பு கொள்கை வடிவமைக்கப்பட்டு பல தனியார் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புக்கள் உருவாக்குப்பட்டு இந்த துறை பெரும் அளவில் விரிவுப்படுத்தப்பட்டது.

காற்றலைகளை பயன்படுத்தினால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையை விலக்கி உத்தரவிட்டது அடல் பிகாரி வாஜ்பாய் அரசு. காற்றலைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் வருவாயிலிருந்து ஓர் குறிப்பிட்ட சதவீதத்தை அரசாங்கத்திடம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.  இந்த தொலைதொடர்பு கொள்கை நிறுவனங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வாஜ்பாய் அரசு தொலைதொடர்பு துறை சந்தையில் ஓர் பெரும் போட்டியை எற்படுத்தியதன் காரணமாக அழைப்பு கட்டண நிர்ணயங்கள் வெகுவாக குறைந்தன. அரசாங்கத்தின் ஏகபோக போக்கிற்கு முடிவுக்கட்டப்பட்டு நாட்டின் தொலைதொடர்பு துறையின் தரம் வெகுவாக உயர்ந்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் அரசால் தொலைதொடர்பு துறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் நாட்டில் அலைபேசியின் அதிவேக வளர்ச்சிக்கு வித்திட்டது.

2004-ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தை விட்டு வாஜ்பாய் சென்ற போது, அலைபேசியின் இணைப்பு எண்ணிக்கை தரைவழி தொலைபேசி இணைப்பு எண்ணிக்கையை தாண்டிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியா உலகின் முக்கியமான மூன்று ஸ்மார்போன் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்குள் அமெரிக்காவை முந்திக்கொண்டு இரண்டாம் இடத்தை பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓர் பாமர மனிதனின் பிடியினுள் அலைப்பேசிகளை வசப்படுத்தியதற்கும் இந்தியாவின் தொலைதொடர்பு முறையை மாற்றியமைத்ததற்க்கும் நாம் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய தருணமிது.

ஒரு காலத்தில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை “கணிணி அறிவற்றவர்” என பகடி செய்திருந்தது. ஆனால் அவர் இந்தியாவின் தொலை தொடர்பு துறையில் மாபெரும் புரட்சியை நிகழ்த்தி ஓர் சகாப்தம் படைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

Photo Credits – Zee News

Tags
Show More
Back to top button
Close
Close