செய்திகள்

65 ஆண்டுகால நண்பனை இழந்து தவிக்கிறேன்- அத்வானி உருக்கம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று மாலை 5.15 மணிக்கு காலாமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று முதல் மோசமாகி வந்ததாக மருத்துமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று மாலை அவர் உயிரிழந்தார்.

என் 65 ஆண்டுகால நண்பனை இழந்து தவிக்கிறேன். தவிப்பை கூற வார்த்தைகள் இல்லை  என பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.  அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிக்கிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டது என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பகக்த்தில், “சகோதர நேசத்தை முன்னிறுத்திய மனிதநேயம் கொண்ட மாமனிதர் திரு.வாஜ்பாய் அவர்களின் இழப்பு இந்திய தேசத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது உறவுகளுக்கும், அவர்பால் பற்றுக்கொண்டவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close