செய்திகள்

பல சுதந்திர போராட்டத் தலைவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம்

இந்தியாவின் 72-வது சுதந்திரதினத்தையொட்டி, பெங்களூரில் உள்ள வித்யா கேந்திரா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு.மோகன் பகவத் அவர்கள் பங்கேற்றார். தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,
“தமிழகத்தின் தலைசிறந்த பாளையக்கார மன்னரான வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்டார். அவர், சுதந்திர போராட்டத் தலைவர்கள் பலருக்கு தூண்டுகோலாக இருந்தார். இதுபோன்ற மன்னர்களின் வல்லமையையும் வீரத்தையும் நாம் இன்றளவும் நினைவுகூர்ந்து வருகிறோம். தனக்காக வாழாது சமூகத்துக்காக வாழ்ந்தவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். ராணி சென்னம்மா, வீர சிவாஜி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் இன்றளவும் நினைவுக் கூரப்படுவதற்கு இதுவே காரணம்”, என்றார் மோகன் பகவத்.

முன்னதாக சுதந்திர தின விழாவில் பாரதியார் கவிதையை தமிழில் சொல்லி பிரதமர் மோடி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Show More
Back to top button
Close
Close