ஊடக பொய்கள்

இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு கிளப்பிய வதந்தி

ஆம் ஆத்மி கட்சி இணையதள பிரிவு பரப்பிய வதந்தியின் காரணமாக இந்திய அளவில் பதற்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சீனாவின் சவுத் சீனா மர்னிங் போஸ்ட் செய்தித் தாளில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் சீனாவில் தங்களுடைய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவின் வங்கி நோட்டுகள் மற்றும் அச்சு கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவரான லியூ குயிசெங் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இச்செய்தி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அடிப்படை புரிதல் கூட இல்லாமல் விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக உரிய விளக்கமளிக்கும்படி மத்திய நிதியமைச்சர்களான அருண் ஜேட்லி மற்றும் பியூஷ் கோயலிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இச்செய்தி உண்மையாக இருந்தால் அது தேசியப் பாதுகாப்பு விதிமுறை மீறல் எனவும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எளிதாக இந்த விஷயத்தில் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சிடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசாங்கம் முற்றிலும் மறுத்துத்துள்ளது. இது குறித்து மத்திய பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்த்ர கார்க் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”இந்திய ரூபாய் நோட்டுகளை சீனா அச்சிடப்போவதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. இந்திய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவிலேயே அச்சடிக்கப்படுகின்றன” எனக் கூறினார்.

விசாரனையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு கிளப்பிய வதந்தியே இத்தனை சர்ச்சைக்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close