கடந்த ஜூன் மாதம், கேரளாவில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி ஒருவரை அடுத்து ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மலங்கரா ஆர்த்தொடொக்ஸ் தேவலயத்தின் பாதிரியார்களுக்கு முன் ஜாமீன் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், மேலும் இரண்டு பாதிரியார்கள் சரண் அடைந்துள்ளனர்.

Kerala’s Malankara Orthodox Church case: Father Sony Varghese and Father Jaise K George have surrendered before Thiruvalla Sessions court. Supreme Court had earlier rejected their anticipatory bail pleas earlier and had directed them to surrender. #Kerala

— ANI (@ANI) August 13, 2018

பாதிரியார் சோனி வர்கீஸ் மற்றும் பாதிரியார் ஜெய்ஸ் ஜார்ஜ் ஆகியோர் திருவல்லா அமர்வு நீதிமன்றம் முன்பு சரண் அடைந்தனர். முன்னதாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மா அவர்கள் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டுகையில், மலங்கரா சிரியன் ஆர்த்தொடக்ஸ் தேவாலயத்தின் தலைமை பிஷப், யூஹனோன் கிறிஸ்தோதாமஸ் அவர்களையும் F.I.R-யில் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Share