கடந்த ஜூன் மாதம், கன்னியாஸ்திரி ஒருவர், கேரள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், 2014 – 2016 ஆண்டுகளில், கத்தோலிக்க டியோசிஸ் ஆப் ஜாலந்தர் தேவாலயத்தின் பாதிரியார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

28 ஜூலை அன்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு, ₹5 கோடி பணம் கொடுக்க முயற்சி நடந்ததாக, கன்னியாஸ்திரியின் சகோதரர் குற்றம் சாட்டியதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு 10 ஏக்கர் நிலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக கன்னியாஸ்திரி அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சமாதானம் பேசப்பட்டதாக மனோரமா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக கேரள போலீசார் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பாதிரியார் ப்ரங்கோ முல்லக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, பாதிரியார் ப்ரங்கோ முல்லக்களின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நியூஸ் 18 செய்தியாளர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை தாக்கும் அளவிற்கு பாதிரியாரின் கும்பல் நடந்து கொண்டிருப்பது இந்த வழக்கில் மேலும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Share