செய்தி சுறுக்கம் : 

  • இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
  • இலங்கை தமிழர்களுக்கு 4,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
  • 14,000 வீடுகளை இலங்கை முழுவதும் கட்டிக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட இலங்கை தமிழர்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தோட்டக்கலை  வேலைகளில் ஈடுபட இலங்கைக்கு சென்றனர். தற்போது இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரிவாக இருக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை தேவையாக இருப்பது நில உடைமையும், நல்ல வீட்டு மனைகளும் தான். இலங்கை தமிழர்களின் நீண்ட நாள் கனவாக இருக்கும் இதற்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, மே மாதம் பிரதமர் அவர்கள் மேற்கொண்ட இலங்கை பயணத்தின் போது, இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களிடையே உரையாடினார்.

Kathir Archives – SriLankan officials in the Programme to give houses built by Modi Govt

அந்த பயணத்தின் போது, இலங்கை தமிழர்களுக்கு மொத்தம் 14,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இலங்கையில்  இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம் தான் உலக அளவில் இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது. இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு, அமெரிக்க டாலர்களின் படி $300 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் படி 20,000 கோடியையும் தாண்டுகிறது.

Kathir Archives – Image of a house built for SriLankan Tamil people by Modi Govt
Kathir Archives – Houses built in Srilanka for Tamil people

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிதிகளான ஊவா மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 4,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இன்று (12/08/2018), இலங்கையில் நுவாரா எள்ளியா பகுதியில் உள்ள துன்சினானே எஸ்டேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். இலங்கை பிரதமர் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார். அடிப்படை வசதிகளை பெறுவதற்கு போராடி வரும் இலங்கை தமிழர்களுக்கு, இந்திய அரசாங்கம் வழங்கும்  இந்த வீட்டு மனைகள் ஒரு வர பிரசாதமாக இருக்கும்.

Kathir Archives – House built by Modi Govt for SriLankan Tamil people

அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதம், இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share