File Image from The Hindu

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள். ஒரு போராட்ட களத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை முன்நிறுத்தியதை பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணலில் பங்கு கொண்ட தி.மு.க-வின் மூத்த தலைவர் திரு. துரைமுருகன் அவர்களிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில் திரு. துரைமுருகன் அவர்கள், இஸ்லாமியர்கள் அவ்வாறு செய்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

“போராட்ட களத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் தொழுகை நடத்தியதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். அவ்வாறு செய்வதன் மூலம் இந்துக்கள் பூஜை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க இடம் கொடுத்துவிடும். இது தவறு, இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்”, என்று கூறினார்.

நெறியாளர் தொடர்ந்து, “இந்து மதத்தின் மீது உள்ள தவறுகளை பற்றி மட்டும் எதிர்த்து அனைத்து அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்கின்றனர். இஸ்லாமிய மதத்திலோ அல்லது கிருஸ்துவ மதத்திலோ நடக்கும் தவறுகளை எதிர்த்து யாரும் குரல் கொடுப்பதில்லையே ?”, என்று கேள்வி எழுப்பினார். அதற்கு திரு. துரைமுருகன் அவர்கள், “நான் இஸ்லாமிய மதத்தின் மீதுள்ள தவறு என்று சொல்லவில்லை. ஒரு போராட்ட களத்தை தங்களின் சுய நலத்திற்காக பயன்படுத்தியது தவறு என்று கூறுகிறேன்”, என்றார்.

இதை தொடர்ந்து அந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. உண்மையை, தன் மனதில் பட்டதை பயமின்றி பளிச்சென்று பேசிய திரு. துரைமுருகன் அவர்களை பாராட்டி பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Share