கர்நாடக முதலமைச்சர் திரு H.D. குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவிற்க்கு வந்த அரசியல் தலைவர்களை திருப்தி படுத்துவதற்காக வரி செலுத்துவோர் பணம் எப்படிப் பிரிக்கப்ப ட்டிருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது. சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், அஷோக் கெலாட், மாயாவதி ஆகியோருக்கு விருந்தோம்பல் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் ₹ 43 லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளனர் என்று RTI தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் பிரமுகர்கள் இரண்டு நாள் தங்கியிருந்ததற்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு நபருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஹோட்டல் கட்டணங்களில் செலவழித்துள்ளன. ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடுவின்  ஹோட்டல் பில் ₹8.3 லட்சம் ஆகும்.

பெங்களூரு மாநகராட்சி (BBMP) தொழிலாளர்களுக்கு மாத கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், ஒரு 37 வயதான தொழிலாளி, பெங்களூருவின் குட்டஹள்ளிய பகுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக சம்பளத்தை பெறாத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் எஸ் சுப்பிரமணி, தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் உதவியில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரமுகர்களால் செலவழிக்கப்பட்ட பண விவரங்கள் கீழே,

சந்திரபாபு நாயுடு – ₹ 8,34,093

கமலஹாசன் – ₹ 1,02,040

அரவிந்த் கெஜ்ரிவால் – ₹ 1,85,188

அகிலேஷ் யாதவ் – ₹ 1,02,400

மாயாவதி – ₹ 1,41,443

கர்நாடக அரசின் மாநில விருந்தோம்பல் பிரிவு தான் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. கடந்த காலத்தில் சித்தராமையா மற்றும் பி.எஸ். எடியூரப்பாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல்வாதிகளுக்கு இது போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share