கடந்த UPA ஆட்சியின் போது முறைகேடான முறையில் சுமார் 2.1 மில்லியன் டாலர் மதிப்பில், P8 I ரக உளவு விமானங்கள் வாங்குவதற்காக மேற்கொண்ட கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்பானிஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திற்கு சாதகமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது மத்திய கணக்கு தணிக்கையாளர் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்பானிஷ் நிறுவனமானது சுமார் 20 வருடங்களுக்கு சேவை அளிப்பதாகவும், விமானத்தில் குறைப்பாடுகள் நேர்ந்தால் சீரமைத்து தருவதாகவும் கூறியிருந்த நிலையில், விலையை குறைக்கும் நோக்கில் போயிங் நிறுவனம் எந்த வித உத்திரவாதமும் தராமல், சில நிபந்தனைகளுடன் கூடிய சேவை மட்டுமே வழங்குவதாக கூறி வாய்ப்பை தனதாக்கி கொண்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதமே, இதற்கான ஒப்பந்தம் முடித்து வைக்கப்பட்டது. ஒப்பந்தம் முடிந்த  அந்த நேரத்தில் போயிங் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி அதன் நிலை மெல்ல மெல்ல சரிவடைய தொடங்கியது. L1 விற்பனையாளர் என்ற அந்தஸ்தையும் இழந்தது.

அது மட்டுமல்லாது இதனோடு சேர்ந்த இன்னொரு ஒப்பந்தமான, கடற்படை கண்காணிப்புக்கான சாதனங்கள் வழங்கும் ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சுமார் 641 அமெரிக்க டாலர் மதிப்பிலான அது, 2016 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அதில் எந்த வித முன்னேற்றத்தையும் காட்டாமல் இருக்கிறது போயிங் நிறுவனம்.

இதுதவிர, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றினை மத்திய கணக்கு தணிக்கையாளர் கூறியிருக்கிறார். அதில், இந்திய இராணுவத்துக்கான தொழில்நுட்ப திறனுக்கு போயிங் நிறுவத்தின் தொழில்நுட்பம் ஒருங்கமையவில்லை என்றும், விமானங்களில் உள்ள சாதனத்தின் உட்கட்டமைப்பு மற்றும் ராடர் சாதனத்தின் சிக்னல் எல்லை போன்றவை. இந்திய இராணுவத்தின் தேவைக்கு ஏற்ப மேம்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

இன்னும் இந்த விவகாரத்தை உன்னிப்பாக நோக்கினால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து விவகாரங்களும், பகுதியளவே முடிக்கப்பட்டு இருக்கின்றன. நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் சோனார் தொழில்நுட்பத்திலும் கேட்ட அளவிற்கு நிவர்த்தி செய்யப்படவில்லை. அதுபோக  ‘X’ Bomb என்பதும் விடுப்பட்டு இருக்கிறது. விமானத்தின் ASW திறனும் எதிர்பார்த்த அளவுக்கு மேம்படவில்லை.

இத்தனை குறைபாடுகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் நிபந்தனைகளை போயிங் நிறுவனம் பூர்த்தி செய்வதற்கு முன்னரே விமானங்களை போர் பயிற்சி, போர் ஒத்திகை போன்றவற்றிற்கு பயன்படுத்தி தேய்மான நிலைக்கு கொண்டுவந்துள்ளது முந்தைய அரசு.

இந்த ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே ஒன்றுமில்லாத ரபேல் விவகாரத்தை பூதாகரமாக்க பார்க்கிறதா காங்கிரஸ் கட்சி என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.

Pic Credits – Hindustan Times

SG Suryah is an Advocate practising in the High Court of Madras & Company Secretary by profession. Currently he is the Vice President of BJYM (BJP Youth Wing) of Tamil Nadu.

Share