மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றிபெற்றுள்ளார்.

மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.  இதனையடுத்து புதிய மாநிலங்களவை துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

Advertisement

இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஐக்கிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங்கும், காங்கிரஸ் வேட்பாளராகக் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்தும் போட்டியிட்டனர். மொத்தம் 244 உறுப்பினர்கள் இருந்த நிலையில் கருணாநிதி இறப்பின் காரணமாக திமுக உறுப்பினர்கள் 4 பேர் இன்று அவைக்குச் செல்லவில்லை.

இறுதியாக ஹரிவன்ஸ் நாராயண் சிங்  125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.கே. ஹரி பிரசாத்துக்கு 105 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற்ற ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் நநேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பிடிபி உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கையில், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்குஜிக்கு இந்த அவை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் பிரதமர் சந்திர சேகர் ஜீக்கும் பிடித்தமானவர்’ என புகழாரம் சூட்டினார்

Share