மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை முதல்வராக பணியாற்றியவரும், அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (07/08/2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

அவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது. கட்சி கொள்கை ரீதியாக எவ்வளவு மாறுபாடு கொண்டிருந்தாலும் அனைவரிடமும் நட்பு கொண்டிருந்தார். இப்படி பட்ட ஒரு மாபெரும் அரசியல் தலைவரை தமிழகம் இழந்துள்ளது.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும்,  அவரது பிரிவை தாங்கும் வலிமையை  அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி  தொண்டர்களுக்கு  வழங்கிடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தி வேண்டுகிறேன்.

– பொன். இராதாகிருஷ்ணன்

Share