சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒரு நிமிடம் கூட அமலில் இருக்க தகுதியில்லாத அரசு ஆணை இது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணைக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.

தற்போது இந்த தீர்ப்பின் மூலம், சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தற்போதைக்கு சாத்தியமில்லை. சிலை கடத்தல் வழக்குகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேல் குழுவினர் பல சிலைகளை மீட்டு தமிழகதிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆனால் இந்த குழு தொடர்ந்து விசாரணை நடத்தினால், தமிழகத்தில் முக்கிய அரசியல் புள்ளிகள் இந்த வழக்குகளில் சிக்க கூடும் என தெரிகிறது. எனவே அதற்கு பயந்து தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

சமீபத்தில் சென்னை அருகே போரூரில் காரில் கடத்தி செல்லப்பட்ட ஐம்பொன் சிலையை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு சினிமா பாணியில் ஆட்டோவில் விரட்டிச் சென்று மீட்டுள்ளனர்.

Share