மகாராஷ்டிரா மாநிலத்தில் பிம்ப்ரி-சிஞ்சுவாட் மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜ.க வின் சார்பில் ராகுல் என்பவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வினோத் நாதேவும் போட்டியிட்டனர். 128 கவுன்சிலர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். 120 கவுன்சிலர்கள் வாக்களித்தனர், 8 பேர் நடுநிலை வகித்தனர்.

வாக்குப்பதிவு நடந்த பின் , வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 80 வாக்குகள் பெற்று ராகுல் அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வினோத்திற்கு வெரும் 33 வாக்குகளே கிடைத்தன.

பிம்ப்ரி சிஞ்சுவாட்டின் 25 வது மேயராக தேர்ந்தெடுக்கபட்ட ராகுல் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் தொழிலாளிகள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் தனக்கு தொழிலாளியின் பிரெச்சனைகள் நன்கு தெரியும் என்றும், அதற்காக பாடுபட போவதாகவும் தெரிவித்தார். துணை மேயருக்கான தேர்தலிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

சாதாரண ஆட்டோ டிரைவர் மேயர் ஆனது நமது நாட்டின் ஜனநாயக தத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. தமிழ் நாட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடக்குமா ????

 

Share