விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு கடந்த 29-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தி.மு.க. மாணவரணி நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர்.

அங்கு சர்வர் கருணாநிதி மற்றும் பிரகாஷ் ஆகியோரை யுவராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். பாக்சிங் முறையில் ஓட்டல் ஊழியர்களை அவர் தாக்கிய காட்சிகள், அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை அடுத்து, #ஓசிபிரியாணிதிமுக என்ற ஹேஷ் டேகை ட்விட்டர்வாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #ஓசிபிரியாணிதிமுக என்ற ஹேஷ் டேக் தற்போது தேசிய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இது குறித்து ஒரு ட்விட்டர் வாசி பதிவிட்டுள்ள பதிவில், “உங்கள் வயிற்றை நிரப்புவதற்கு எதற்காக ஹோட்டல் தொழிலாளியை தாக்குகிறீர்கள்? தமிழர்கள் யாரும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

வேறொருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒரு வாரம் கஷ்டப்பட்டு அனுதாபத்தை உருவாக்கி வெச்சா ஒரு ப்ளேட் பிரியாணிக்காக அத்தனையையும் காலி பண்ணிட்டீங்களேடா!”, என்று பதிவிட்டுள்ளார்.

“திமுக வினரின் அருவறக்கத்தக்க செயல்”, என்று வேறொருவர் பதிவிட்டுள்ளார்.

 
தொடர்ந்து பலரும், தங்களின் கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். 
 
இதை தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்களை தாக்கிய தி.மு.க வினர், தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தி.மு.க செயல் தலைவர் திரு. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த யுவராஜ் என்னும் நிர்வாகி தி.மு.க-விற்கு முன்பாக ஜி.கே.வாசன் அவர்களின் தமிழ் மாநில கட்சியிலும், பிறகு ஹிந்து மகா சபாவிலும், 2016 முதல் தி.மு.க-வில் பொறுப்பில் இருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஹிந்து மகாசபாவில் இருந்ததை வேண்டுமென்றே திரித்து இவர் பா.ஜ.க-வில் இருந்ததாக போலியான செய்தியை அடிக்கடி போலி தகவலை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கும் கவிதா முரளீதரன் எனும் பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய பிறகும் தனது தவறை திருத்தாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார் கவிதா. இதை டிவிட்டர்வாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Share