ஊடக பொய்கள்

ராகுல் காந்தி மீதான ட்ரோல் பதிவை உண்மை என நம்பி செய்தியை வெளியிட்டனவா பாகிஸ்தானிய ஊடகங்கள் ?

“டைம்ஸ் ஹவ்” என்று ட்விட்டரில் ட்ரோல் பக்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்தை உண்மை என பாகிஸ்தானிய ஊடகங்கள் நம்பி விட்டனவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது பாகிஸ்தானில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ராகுல் காந்தி கூறியாதாக ஒரு பதிவை டைம்ஸ் ஹவ் என்ற ட்ரோல் பக்கம் பதிவிட்டது. அந்த பதிவில், “பாகிஸ்தானில் பாலட் பேப்பர் முறை பயன்படுத்தப்படும் போது இந்தியாவில் ஏன் பயன்படுத்தக்கூடாது?. 10 மணி நேரம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் மின்சாரத்தை சேமிக்க முடியும்”, என்று  ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளதாக அந்த பதிவு இருந்தது.

Just In : “If Pakistan can use Ballot Papers for it’s Elections, why can’t India ? Using Ballot Papers instead of EVMs will help save us a lot of Electricity which gets wasted during 10 hours while the EVM is On.”

– Rahul Gandhi on #PakistanElections2018 (File Pic) pic.twitter.com/G5QByzfuwl

— TIMES HOW (@TiimesHow) July 25, 2018

இதனைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இஸ்லாமாபாத் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Indian Congress Chief Rahul Gandhi wants Pakistan like voting system: Report https://t.co/1k5NHd4IN5

— Times of lsIamabad (@TimesofIslambad) July 27, 2018

தொடர்ந்து, வியன் மற்றும் தி நியூஸ் போன்ற ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், உண்மையிலேயே ராகுல் காந்தி இவ்வாறு கூறினாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இது போலியான செய்தி என்று காங்கிரஸ் தரப்பு விளக்கம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close