இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் சிலைகளை பாதுகாக்க,15 சிலை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 15 சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்க தலா ₹95 லட்சம் வரை அறநிலையத்துறை ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து பொன்.மாணிக்கவேல் தலைமையில் 2 இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவை அமைக்கவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. திரு.பொன்.மாணிக்கவேல் அவர்கள் மீட்ட சிலைகளை பாதுகாப்பு அறைகளில் வைக்காமல் சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்க கோரி திரு.யானை ராஜேந்திரன் அவர்கள், இந்த வழக்கை, தொடர்ந்தார். 

மனுவை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Share