சிறப்பு கட்டுரைகள்

கூட்டாட்சி தத்துவத்தை காக்கவும், சாமானிய மக்களின் வரி சுமியை குறைக்கவும் உதவும் ஜி.எஸ்.டி !!

இந்திய பொருளாதாரம் என்பது பல ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளினால் கட்டமைக்கப்பட்டதாகும்.ஏதோ பொருளாதார மேதைகள் மட்டும் பொருளாதாராத்தை பற்றியும், வரிகளைப்பற்றியும் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. சாமானியன்  ஒவ்வொருவரும் பொருளாதாரத்தை பற்றியும் வரி விதிப்புகளை பற்றியும் பேசுவது அனைவருக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். வாக்கு அளித்தும் வரிகள் செலுத்தியும் இந்தியாவை ஜனநாயக கட்டமைப்புக்குள்ளும் ,வலுவான பொருளாதார கட்டமைப்புக்குள்ளும் கொண்டு வர ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் தன்னுடைய பங்கை அளிக்கிறார்கள்.

பல  மறைமுக வரிகளை ஒன்றாக்கியஜி.எஸ்.டி
ஒரு பொருளை உற்பத்தி செய்து மொத்த வியாபாரம் ,சில்லரை வியாபாரம் ஆகியவற்றை கடந்து செல்லும் போது வாட் வரி(value added tax),எக்ஸைஸ் டுயூட்டி (excise duty),சென்டரல் செர்விஸ் டேக்ஸ்(Central service tax) என பல மறைமுக வரிகள் வசூல் செய்யப்படுவதை  மாற்றி சரக்கு மற்றும் சேவை வரி(Goods and Services tax) என ஒரு வரியாக மாற்றப்பட்டு உள்ளது.கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கும் முறை மற்றும் பழைய வரி விதிக்கும் முறையைப்பற்றி பார்ப்போம்.
****சட்டை த்துணி உற்பத்தியாளர் ஒருவர் 100 ரூபாய்(90ரூபாய் செலவு +10 ரூபாய் வரி) கொடுத்து துணிகளை தயாரிப்பதற்க்கான மூலப்பொருட்களை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

****பிறகு அந்த பொருளின் பிராண்ட் பெயர் ஆகியவற்றை சேர்த்து 130 ரூபாய் என விலை நிர்ணயம் செய்கிறார்.இதற்கு 10%வரி கட்ட வேண்டும்.ஆக விலை 143(130 ரூபாய் விலை+13 ரூபாய் வரி)ஆகிறது.

****மொத்த வியாபாரம் செய்பவர்(whole sale trader) 143 ரூபாய் கொடுத்து சட்டை துணியை வாங்குகிறார்.அவர் 23ரூபாய் லாபம் சேர்த்து 166 என விலை நிர்ணயம் செய்கிறார்.இதற்கு 10 விழுக்காடு வரி கட்டினால் விலை 179.60(மொத்த வியாபாரி நிர்ணயித்த 163 ரூபாய் +16.60 ரூபாய் வரி) ஆகிறது.

****பிறகு சில்லரை வணிகர் மொத்த வியாபாரியிடம் 179.30 ரூபாய் கொடுத்து சட்டை வாங்குகிறார்.அவரும் 10 ரூபாய் லாபம் சேர்த்து 189.30 ரூபாய் என விலை நிர்ணயம் செய்கிறார்.10விழுக்காடு வரி செலுத்தினால் மொத்த விலை ரூபாய் 208.30 ஆகிறது.
****ஆக நுகர்வோர் வாங்கும் போது 208.30 விலை ஆகிறது. உற்பத்தி, மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் தனி தனியே வரிகள் வசூலிக்கப்பட்டு நுகர்வோர் தலையில் விழுந்தது.

இவ்வாறு அடுக்காக ஒவ்வொரு நிலையிலும் வரிகள் வசூல் செய்யும் முறையை மாற்றி அமைத்தது ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை.உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) என்பது ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் முறையில் இருக்கும் மிக பெரிய பயன்.எவ்வாறு பழைய நிலையை ,ஜி.எஸ்.டியில் உள்ள உள்ளீட்டு வரி வரவு (Income tax credit) முறை மாற்றி அமைத்து இருக்கிறது என கீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் பார்ப்போம்.

****சட்டை உற்பத்தியாளர் வரியோடு சேர்த்து 100 ரூபாய்க்கு மூல பொருட்களை வாங்குகிறார்.லாபம் 30  ரூபாய் சேர்த்து 130ரூபாய் என வரியை தவிர்த்து விலை நிர்ணயம் செய்கிறார்.பிராண்ட் பெயர் சேர்க்கும் போது 10%வரி செலுத்த வேண்டும். 143 என விலை ஆகும்.ஆக மூல பொருட்கள்(raw materials) வாங்கும் போது 10ரூபாய் வரி செலுத்துகிறார்.வியாபார குறியீடு/தரக்குறியீடு சேர்த்து விற்பனை செய்யும்  போதும் 13 ரூபாய் வரிச்செலுத்துகிறார்.

****ஆக உள்ளீட்டு வரி வரவு=தரக்குறியீடு சேர்த்து விற்பனை செய்யும் போது வசூலிக்கப்படும் வரி-மூலப்பொருட்கள் வாங்கும் போது வசூலிக்கப்பட்ட வரி(Input tax credit=tax on outputs-tax on inputs).ஆக இந்த எடுத்துக்காட்டில் ,10 ரூபாய் மூல பொருட்கள் வாங்கும் போது செலுத்தப்பட்ட தொகையை கழித்து,உற்பத்தியாளர் 3 ரூபாய் வரி செலுத்த வேண்டும்.

****பிறகு மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர் 130 ரூபாய் கொடுத்து சட்டையை வாங்குகிறார். மொத்த விற்பனையாளர் லாபம் 20 ரூபாய் சேர்த்து 150 ரூபாய் என விலை நிர்ணயம் செய்கிறார்.10%வரிவிதிப்பு என்றால் 15 ரூபாய் வரி ஆகிறது.உற்பத்தியாளரிடமிருந்து வாங்கும் போது 13 ரூபாய் செலுத்திய தொகையிலிருந்து கழிக்கப்பட்டு (15-13) ,செலுத்த வேண்டிய வரி 2 ரூபாய் ஆகிறது.

*****ஜி.எஸ்.டி படி, சில்லரை வியாபிரிகளிடம் செல்லும் போது 160ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும்.உள்ளீடு வரி வரவின் படி ,செலுத்தப்பட வேண்டிய வரி ,மொத்த விற்பனை நிலையில் செலுத்தப்பட்ட 15 ரூபாயில் இருந்து கழிக்கப்பட்டு 1ரூபாய் வரி ஆகிறது.
****நுகர்வோர் செலுத்த வேண்டிய வரி ஒவ்வொரு நிலையில் உள்ளீடு வரி வரவு முறைப்படி 16 ரூபாய் ஆகிறது.166 ரூபாய் ஒரு சட்டையின் விலை ஆகிறது.பழைய வரி முறையின் படி 208.23 ரூபாய் ஆகிறது.ஜி.எஸ்.டி முறையில் ஒவ்வொரு நிலையிலும் மூலப்பொருட்களுக்கு செலுத்தும் வரி கழிக்கப்படுகிறது.ஆகவே பல வரிகள் ஒரே வரியாக ஆகும் போது விலை கணிசமாக குறைகிறது
பழைய முறையில் உள்ளீடு வரி வரவை கோருவதற்கான வாய்ப்பு வாட் வரி,சர்வீஸ் டேக்ஸ்,எக்ஸைஸ் டுயூட்டி ஆகிய வரிகளில் இருந்தது. பழைய வரி முறையில் உள்ளிடு வரி வரவை சென்டரல் சேல்ஸ் டேக்ஸ், என்டரீ டேக்ஸ், லக்ஸூரி டேக்ஸ் ஆகிய வரிகளில் கோர முடியாது. ஜி.எஸ்.டி யில் உள்ளீடு வரி கோருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஜி.எஸ்.டி கவுன்சில் உணர்த்தும்கூட்டாட்சித்தத்துவம்
ஜி.எஸ்.டி குறித்து முடிவுகள் எடுக்கவும், வரிகளை மாற்றி அமைக்கவும் அதிகாரம் படைத்த அமைப்பாக இருப்பது ஜி.எஸ்.டி கவுன்சில்.ஜி.எஸ்.டி கவுன்சிலின் உறுப்பினர்களாக மத்திய நிதி அமைச்சர்,மத்திய இணையமைச்சர்,ஒவ்வொரு மாநிலத்தின் நிதியமைச்சர் அல்லது மாநில அரசால் நியமிக்கப்படும் அமைச்சர் இருப்பர்.இதன் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
1ஜுலை2017 யில் ஜி.எஸ்.டி யில்இதுவரை மாற்றி அமைக்கப்பட்ட வரிகள்

0%,5%,12%,18%,28% என பொருள்களுக்கு தகுந்தவாறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது.பெட்ரோலிய பொருட்கள், மதுபான பொருட்கள்,மின்சாரம்,ரியல் எஸ்டேட் ஆகியவை ஜி.எஸ்.டி வரம்பில் கொண்டு வரப்படவில்லை.ஜி.எஸ்.டி கவுன்சிலால் தேவைப்படும் போது வரிகளை மாற்றி அமைக்கப்படும்.அதன்படி  நவம்பர்2017ல் ஹோட்டல் துறை சார்ந்த ஜி.எஸ்.டி வரிகள் மாற்றம் செய்யப்பட்டன.2013 இந்திய புட் சர்வீஸ் ரிப்போர்ட்(India

Food Service Report)படி ஹோட்டல் துறையின் அளவு ரூபாய் 2,47,680 கோடி எனக்கணக்கிடப்பட்டு இருந்தது.

2018 ல் 4 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்து இருக்கிறது என அந்த அறிக்கை சொல்கிறது.18% என இருந்த ஹோட்டல் உணவு பொருட்களின் வரி,7500க்கும் கீழ் ஹோட்டல் பில் இருக்குமேயானால் 5 சதவிகிதமாக வரி இருக்கும் என ஜி.எஸ்.டி கவுன்சிலிவ் முடிவெடுக்கப்பட்டது.

காணாமல் போன சோதனை சாவடிகள்

ஜி.எஸ்.டி அமலான பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுவது சோதனை சாவடிகள் இல்லாமல் போனது.கடந்த 03ஜூலை 2017 எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டியின் நோக்கமான சரக்குகளின் துரிதமான போக்குவரத்து நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.நீண்ட தூரம் சரக்கு ஏற்றி செல்லும் சரக்குந்துகள்(லாரிகள்) இனி வரிசையில் சோதனைக்காக நிற்பது தவிர்க்கப்படுகிறது.கால விரயம் தவிர்க்கப்படுவது மூலம் சரக்குகள் உரிய நேரத்தில் உரிய இடம் சேர வழிவகை ஏற்பட்டு உள்ளது.

நுழைவு வரி(entry tax )மற்றும்மதிப்பக்கூட்டு வரி(VATஇல்லாததால்இல்லாமல் போகும்  வாகனபர்மிட்டுகள்(Vehicle permits)
கடந்த 24 ஜுலை2018 அன்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் பழைய வாகன பர்மிட் முறை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறுகிறது.ஒரு அரசு அதிகாரி எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு தகவல் அளிக்கையில் “ஜி.எஸ்.டி கவுன்சில் இது தொடர்பாக அனைத்து பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறது”. மேலும் அவர் கூறுகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு நேஷ்னல் வாகன பர்மிட்டுகள்,மாநில வாகன பர்மிட்டுகள், சோதனை முறைகள் ஆகிய முறைகளை அகற்ற பரிந்துரைகளை இது தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சிலால் அமைக்கப்பட்டக்குழு பரிந்துரை செய்தது.ஜி.எஸ்.டி வருவதற்கு முன் நிலுவையில் இருந்த மதிப்பக்கூட்டு வரிகள் ,நுழைவு வரிகள் முறை ரத்து செய்யப்பட்டுவிட்டதால் வாகன பர்மிட் முறை தேவையற்றது என அக்குழு கருதுகிறது.சோதனை சாவடிகள் குறைந்த போதிலும் வேறு சிலவற்றகற்க்காக சோதனை மேற்கொள்ளப்படுகிறது.ஜி.எஸ்.டி கவுன்சில் ஏற்படுத்திய குழு சரக்கு ஏற்றிச்செல்லும் சரக்குந்துகளுக்கு
சாலை வரி,மாசு கட்டுபாடு சான்றிதழ்,பர்மிட்டுகள் ஆகியவற்றை உள் அடக்கிய சான்றிதழ் ஒவ்வொரு சரக்கு வாகனத்துக்கும் வழங்கும் நடைமுறை கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் வாகனங்கள் சாலையில் சரக்குகளை ஏற்றிச்செல்ல உகந்ததா என்பது சரிப்பார்க்கப்படும்.மேலும் அந்த பரிந்துரையில் ஜி.பி.எஸ் மூலம் வாகனங்களை கண்கானிக்க சாதனங்கள் பொருத்தப்படும் எனவும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரிகள் குறைக்கப்பட்ட மற்றும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ள பொருட்கள்
 

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் ஒரு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது .மேலும் சில பொருட்களின் வரி குறைக்கப்பட்டு உள்ளது.

கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முடிவை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
1)மார்பல்,கற்கள் மரம் ஆகியவற்றால் ஆன சிலைகள்
2)ராக்கீ கயிறுகள்
3)சானிடரீ நாப்கின்கள்
4)தேங்காய் நார் உரம்
5)இலைகளால் ஆன தட்டுகள் மற்றும் சணல் கயிறுகள்
6)பழைய நாணயங்கள்
கீழ்க்கண்ட பொருட்களுக்கு 28% வரி விதிப்பில் இருந்து 18%வரியாக நிர்ணயம் செய்யப்படும்
1)பெயின்ட் மற்றும் வார்னிஷ் பொருட்கள்
2)மெருகிடுவோர் மக்கு(glaziers putty),ரெஸின் சிமெண்ட்(resin cements)
3)குளிர் சாதன பெட்டி மற்றும். குளிர் சாதன பொருட்கள்
4)வாஷிங் மெஷின்
5)லித்தியம் பாட்டரீகள்
6)வாக்யூம் க்லீனர்
7)மிக்சி,கிரைண்டர் மற்றும் சமையலறை உபகரணப்பொருட்கள்
8)வாட்டர் ஹீட்டர்,ஹேர் ட்ரையர்,ஹேண்ட் ட்ரையர்,அயன் பாக்ஸ்
9)க்ரேன் லாரிகள்,தீயனைப்பு வாகனங்கள்
10)சென்ட் ஸ்பரே
மேலும் சில பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக 28%  வரி விதிப்பில் இருந்த பொருட்களின் வரி குறைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்தியா டுடே செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.முதலில் 226 பொருட்கள் 28% விதிப்பில்  இருந்த நிலையில் தற்போது பல பொருட்களின் வரி குறைப்பின் மூலம் 35 பொருட்கள் மட்டும் 28%வரி விதிப்பில் அடங்கும்.இதன் மூலம் வரி விதிப்பு சீர்ச்செய்யப்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல் செய்யப்பட்டு கடந்த ஓராண்டில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டங்களில் முடிவாக இது வரை 191 பொருட்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர்மற்றும் பொருளாதார நிபுணர்களின்கருத்து
தலைமை பொருளாதார ஆலோசகராக இருக்கும் அரவிந்த் சுப்பிரமணியன் கருத்து த்தெரிவிக்கையில் 28%வரி விதிப்பு என்பது பெயர் அளவில் மட்டும் இருக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்.இன்னும் ஓராண்டில் இந்த நிலை ஜி.எஸ்.டி கவுன்சிலால் எய்தப்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.வரி வசூல் அதிகமாகும் போது ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 28%வரி விதிப்பில் அடங்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.டெலாய்ட் இந்தியா பார்டனர் எம்.எஸ் மணி கருத்து த்தெரிவிக்கையில் சிகரெட் போன்ற சிதைவு பொருட்களுக்கு மட்டும் 28%வரி விதிப்பில் வைத்து விட்டு குறைந்த வரி விதிப்பிற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இந்தியா டுடேவுக்கு கூறியுள்ளார்.  இ.வை பார்டனர் அபிஷேக் ஜெயின் “இந்த வரி குறைப்பு ,ஆடம்பர பொருட்கள் மற்றும் சிதைவு பொருட்கள் மட்டும் 28%வரி விதிப்பில் இருக்கும் நிலை எய்தப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை காட்டுவதாக கூறியுள்ளார்.
அஸோச்சாம் தலைவர் ஸந்தீப்
ஜஜோடியா கருத்து த்தெரிவிக்கையில் ஜி.எஸ்.டி நடைமுறை அமல்படுத்தப்பட்டது ஜி.டி.பி வளர்ச்சிக்கு வித்திடும் என எகனாமிக் டைம்ஸ்க்கு தெரிவித்துள்ளார்.வரி மற்றும் ஜி.டி.பி விகிதம் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

  ஜி.எஸ்.டி 17 ஆண்டுகளுக்கு முன்பேதுவங்கப்பட்ட சீர்திருத்தம்

கடந்த 06ஜுலை 2017 அன்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் கருத்து த் தெரிவித்தை எக்னாமிக் டைம்ஸ் வெளியட்டு இருந்தது.2003 ல் ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கான குழுவை அமைத்தது திரு வாஜ்பாய் தலைமயிலான அரசாங்கம்.மத்திய அரசு வரிகள் மற்றும் மாநில அரசு வரிகள் அகற்றப்பட்டு ஒரே வரி விதிப்பு கொண்டு வரப்பட்ட வேண்டும் என பரிந்துரை செய்தது அக்குழு.2006ல் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ,2010 ஆண்டை ஜி.எஸ். டி அமல்படுத்துவதற்கான காலக்கெடு என அறிவித்தார்.ஆனால் திரு ப.சிதம்பரம் அவர்களால் அதை நிறைவேற்ற இயலவில்லை .

2011 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்தார்.திரு அருண் ஜெட்லி மேலும் கருத்து த்தெரிவிக்கையில் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் மாநிலங்களை சம்மதிக்க வைக்க முடியவில்லை.மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவில்லை. மாநிலங்களின்  சம்மதம் இல்லாததால் ஜி.எஸ்.டி அமல்படுத்துவது தாமதம் ஆனது.

 பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை ஒற்றை வரி விதிப்பு முறையால் இணைப்பதில் உறுதியாக இருந்தார்.மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒப்புதலைப்பெற்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ததது.அதோடு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களிலும் சட்டம் இயற்றுவதற்கான சூழலை உருவாக்கினார்.இவ்வாறு அருண் ஜெட்லி கருத்து கூறியுள்ளார்.

திரு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தொடங்கி 17 ஆண்டுகள் கடந்து மாநிலங்களின் ஒப்பதலோடு 2017 ல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது ஜி.எஸ்.டி.

Tags
Show More
Back to top button
Close
Close