ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்துவரும் பட்டியல் இன இளைஞர், கேடாராம் பீல். இவர் தான் பணி புரிந்து வந்த வீட்டில் உள்ள இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை சகித்து கொள்ள முடியாத அந்த இஸ்லாமிய பெண்ணின் உறவினர்கள், கேடாராம் பீலை, தனது சகோதரர்கள் முன்னிலையிலேயே துடிக்க துடிக்க அடித்து கொன்றுள்ளனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியல் இன இளைஞரை, அந்த இஸ்லாமிய பெண்ணின் உறவினர்கள், கை கால்களை கட்டி அடித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அடித்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது உடலை வீசி உள்ளனர். அந்த பெண்ணின் உறவினர்கள், அவரை அடிக்கும் போது, அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றுள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்கு முன்னர், இரு குடும்பத்தினரிடையே நில தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு, சதாம் கான் மற்றும் ஹயது கான் ஆகிய இருவரும் அந்த இளைஞரை ஒரு சிறிய வேலைக்காக தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அமர் கான், அன்வர் கான், அக்பர் கான், ரஹீம் கான், முஹீப் கான், பதை கான் மற்றும் ஷவ்கத் கான் ஆகியோர் முன்னதாகவே நிலத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்து தனியாக வந்த பட்டியல் இன இளைஞரை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துள்ளனர். வலியை தாங்க முடியாமல் கத்திக் கதறியுள்ளார் அந்த இளைஞர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இளைஞரின் சகோதரர்களையும் அடித்துள்ளது அந்த இஸ்லாமிய கும்பல்.

சனிக்கிழமை காலையில், சதாம் கான் மற்றும் ஹயது கான் ஆகியோர், அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்று, “அவனை கொன்று விட்டோம். உடலை நிலத்தில் போட்டுள்ளோம், எடுத்து செல்லுங்கள்” என்று கூறியதாக உயிரிழந்தவரின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் புரிந்த பத்து பேரில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ட் மாட்டத்திற்கு பிறகு, உயிரிழந்தவரின் உடல், பெற்றோர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Pic courtesy : Op India

Share