வேலுார், அண்ணா சாலையில், சர்ச் ஆப் சவுத் இந்தியா எனப்படும் சி.எஸ்.ஐ., மத்திய தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்திற்கு அடுத்த மாதம், நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தேவாலயத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர், நாற்காலிகளால் தாக்கிக் கொண்டனர் என்று தினமலர் செய்தி குறிப்பு கூறுகிறது.

கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக தேவாலயம் வந்திருந்த நிலையில், தேவாலயம் போர்க்களமாக மாறியதால், பிரார்த்தனைக்கு வந்த மக்கள் அலறியடித்து ஓடினர். வேலுார் வடக்கு போலீசார், இரு பிரிவைச் சேர்ந்த, 40-க்கும் மேற்பட்டோரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். தேவாலயத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், போலீசார் சோதனை நடத்தினர்.

நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த, தேவா என்பவரின், போர்டு காரில், ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதையடுத்து, தேவாலயம் பூட்டப்பட்டு, வேலுார் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

கேரள பாதிரியார்களின் கூட்டு கற்பழிப்பு, காசுக்காக குழந்தைகளை விற்ற அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனம் போன்ற சம்பவங்களை தொடர்ந்து தற்போது வேலூரில், தேவாலயத்தில் இருந்து துப்பாக்கி, வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பது, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Picture Courtesy : Dinamalar

Share