இந்தியாசெய்திகள்

அரசு பள்ளியை இஸ்லாமிய பள்ளியாக மாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் குர்ஷித் அஹமத்

உத்திரபிரதேசத்தில் ஒரு அரசு பள்ளி ‘இஸ்லாமிய ஆரம்ப பள்ளி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகளின் படி, பள்ளி ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளியின் அனைத்து ஆவணங்களும் உருது மொழியில் பராமரிக்கப்படுகிறது.

தியோரியாவில் உள்ள நவல்பூர் கிராமத்தில் அரசு முதன்மை பள்ளி வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர விடுமுறை எடுத்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி திறந்திருக்கும். பிளாக் கல்வி அதிகாரி தலைமையில் ஒரு குழு, வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு சென்றபோது பள்ளி மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளியின் வருகை பதிவேடு, சேர்க்கை பதிவு மற்றும் ஆசிரியரின் வருகை பதிவு ஆகியவை உருது மொழியில் பராமரிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

விசாரணையின்போது, ​​ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளி மூடப்படடுவதாகவும், வெள்ளிக்கிழமைகளில் மதிய உணவு விவரங்கள் பூஜ்ஜியமாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறியதாக பிளாக் கல்வி அலுவலர் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். அறிக்கைகள் படி, பத்து ஆண்டுகளாக அங்கு பணியாற்றிவரும் பள்ளியின் தலைமையாசிரியர் குர்ஷித் அகமது, அரசாங்க அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான குர்ஷித், “ஆரம்ப பள்ளி, நாவல்பூர்”, என்ற பள்ளியின் பெயரை  “இஸ்லாமிய ஆரம்ப பள்ளி”,  என மாற்றினார். ஜக்ரானில் உள்ள ஒரு அறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள மக்கள், இந்த பள்ளி, சிறுபான்மையினர் துறையால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்ட BEO கியானாந்த்ரா மிஸ்ரா, மற்ற கல்வி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றபோது, ​​பள்ளி மூடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முஸ்லீம்கள் மற்றும் பெரும்பாலான மாணவர்களும் முஸ்லிம்களாக உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு  அடிப்படை சிக்ஷா ஆதிகாரிக்கு மாவட்ட நீதபதி உதரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் BEO-விடம் இருந்து விளக்கம் பெற்ற பின்பு, அரசு விதிகளை மீறியதற்காக தலைமை ஆசிரியருக்கும், ஊழியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close