செய்திகள்

சிதறிப்போவோம் என்று தெரிந்தே தலையை வைத்த எதிர்கட்சிகள்: பதறாமல் பாஜக எம்.பிகள் அமைத்த வியூகம்..!

மக்களவையில் நேற்று சுமார் 11 மணி நேரமாக நீடித்த விவாதத்திற்குப் பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதில் பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் பதிவாகியுள்ளன.

பெரும்பான்மையை கொண்டுள்ள அரசு ஆட்சியில் இருக்கும் போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது எளிதில் தோற்கடிக்கப்படும் என்று தெரிந்தும் எதிர்காட்சிகள் இந்த முடிவை எடுக்க காரணம், ஒவ்வொருவரும் அவர்கள் மாநிலத்திற்காக குரல் கொடுத்து, மத்திய அரசை எதிர்ப்பது போன்ற மாய தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்ததானே தவிர, சமூக நலனில் எள்ளளவு கூட அக்கறை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக தெரியவில்லை.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கபட்டது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் எதிரொலி தான் என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார். சுமார் 12 மணி நேர விவாதத் துக்குப் பிறகு வாக்கெடுப்பின் இறுதியில் aஆளும் மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த தால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

அப்போது, தொடர்ந்து மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்ட மோடி, மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களால் அவையின் முன்பு தாம் தைரியமாக நிற்பதாக குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட யாரையும் நம்பாத காங்கிரஸ் இப்போது தமது அரசின் மீதும் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதாக மோடி கூறினார்.

மேலும்,இது அரசுக்கு முன்வைக்கப்பட்ட சோதனை அல்ல.காங்கிரசும் அதன் நட்புக்குரிய கட்சிகளுக்கும் வைக்கப்பட்ட சோதனை. பிரதமராக ஆசைப்படுகிற ஒருவருக்கு வைக்கப்பட்ட சோதனை, அதற்கு இதர கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டுவதற்கான முயற்சி. எதிர்க்கட்சியினர் சிதறிவிடாமல் ஓரணியில் இருப்பதற்காக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close