தமிழ் நாடு

தேசிய அளவில் Trend ஆகும் #ZeroMPDMK – “ஒரு எம்.பி-க்கூட இல்லை அப்புறம் என்ன தார்மீக ஆதரவு?” தி.மு.க, ஸ்டாலினை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளையே இத்தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெலுங்கு தேசம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்காக காங்கிரஸ்- பா.ஜ.க அல்லாத கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறது தெலுங்கு தேசம். தற்போது தெலுங்கு தேசம் எம்.பி. சீனிவாஸ் கேசினேனி லோக்சபா செயலாளரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

ஆந்திர பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது, காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று லோக் சபாவில் 37 எம்.பி-க்களை வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

பிற கட்சிகளும் தங்கள் நிலைபாடுகளை அறிவித்து வரும் நேரத்தில் ஒரு எம்.பி-க்கூட இல்லாத தி.மு.க வலிய சென்று இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து வருவது நகைப்புக்கு உரியதாக மாறியுள்ளது.

இது குறித்து தி.மு.க டிவிட்டர் பக்கத்தில் “கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும். – திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் ” என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் “மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும். – ஸ்டாலின். திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.” என்று பதிவிட்டார்.

இவை அனைத்தும் நடந்துக் கொண்டு இருக்க சில பா.ஜ.க ஆதரவாளர்கள் #ZeroMPDMK என டிவிட்டரில் பதிவிட ஆரம்பித்தனர். இந்த ஹேஷ்டேகில் மற்றவர்களும் பதிவு செய்ய ஆரம்பிக்கவே இது தேசிய அளவில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதில் பதிவிடப்படும் பல டுவீட்டுகள் நகைப்புக்கு உரியதாகவும், அதே நேரத்தில் தி.மு.க-வின் உண்மை நிலையை உணர்த்துவதாகவும் உள்ளது. சில ட்வீட்டுகள் இங்கே.

https://twitter.com/saravana59769/status/1019900734739902464

கட்சிசார்பற்ற நூற்றுக்கணக்கான இணையவாசிகளும் தி.மு.க மற்றும் ஸ்டாலினை நகை பொருளாக்கி ஆயிரக்கணக்கான டிவிட்டர் மற்றும் முகநூல் பதிவுகளை பதிவது, மக்களால் தி.மு.க எவ்வளவு வெறுக்கப்படுகிறது என்பதற்கான அளவுகோலாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன், கடைசியாக ஆர்.கே.நகரில் நடைபெற்ற சட்டமன்ற இடைதேர்தலில் டெபாசிட் கூட பெற முடியாமல் தி.மு.க மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதும், 2014 பாராளமன்ற தேர்தலில் ஒரு எம்.பி தொகுதியைக் கூட ஜெயிக்க முடியாமல் பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தமிழக மக்களால் தி.மு.க தள்ளி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Cover Pic Credits – News 7.

Tags
Show More
Back to top button
Close
Close