செய்திகள்

ரணகளமான தொலைக்காட்சி நேரலை: ‘முத்தலாக்’ விவாதத்தில் பெண்ணை தாக்கிய இஸ்லாம் அறிஞர்..!!

முத்தலாக் குறித்து ‘ZEE HINDUSTAN’ தொலைக்காட்சியின் நேரடி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாம் அறிஞரான மௌலானா இஜாஸ் அர்ஷத் காஸிமிக்கும், உச்ச நீதிமன்ற பெண் வக்கீலான Farah Faizக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது விவாதம் முற்றி இருவரும் சப்தமிட்டு பேசும்போது இஸ்லாம் அறிஞரான மௌலானா இஜாஸ் அர்ஷத் காஸிமி பெண் வக்கீலை ஓங்கி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் அறிஞரான மௌலானா பெண் வக்கீலான Farah Faiz மட்டுமல்லாது Amber Zaidi என்ற சக பேச்சாளரையும் ஆரம்பத்தில் இருந்தே தாக்கி பேசி வந்துள்ளார். அவர்களின் குடும்பம் பற்றி கீழ்த்தரமாக விமர்சித்து இருக்கிறார். இதனை தொடர்ந்தே Farah Faizக்கு கோபம் ஏற்பட்டு மௌலானாவை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறார்.

வழக்கறிஞரான Farah Faiz முத்தாலக் சட்டதிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இஸ்லாமிய பெண்மணியாவார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், இஸ்லாம் அறிஞராக இருந்த போதிலும் மௌலானா அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று நான் கையை உயர்த்திய பொழுது என்னை தாக்கினார். மேசையின் மீது இருந்து கண்ணாடி டம்ளரை எடுத்து அடிக்க பாய்ந்தார். நல்ல வேளையாக அருகில் இருந்த சக பேச்சாளர் Yaseer தடுத்து காப்பாற்றி விட்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு மௌலானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த சம்பவத்திற்கு அந்த தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு உண்டான சுதந்திரத்தை பறிக்கும் மௌலானா போன்றவர்களை சிறையில் அடைக்க வேண்டும். இதுவே பலரின் எதிர்பார்ப்பாக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த Aamir Haider Zaidi, பெண்ணை தாக்கிய மௌலானாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இது பெண்கள் மீதான அவரது மனப்போக்கை வெட்டவெளிச்சமாக காட்டுகிறது.

‘முத்தலாக்’ முறையின் மூலமாக் பல முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ஒருத்தியாக குரல் கொடுத்த பெண் தொலைக்காட்சி நேரலையின் போதே தாக்கப்பட்டு இருக்கிறார். இதுதான் பெண்கள் மீதான அவர்களின் மதிப்பை காட்டுகிறது. இன்னும் ஆதி காலத்தில் இருந்த அடக்குமுறை பெண்கள் மீது ஏவி அடக்க பார்க்கிறது இஸ்லாமிய சட்டங்கள். இப்போது மனித உரிமை அமைப்புகள், பெண்கள் உரிமை அமைப்புகள் தோன்றி விட்டன. பெண்களுக்கு சிறு இடர் நேர்ந்தாலும் குரல் கொடுக்க தவறுவதில்லை. இந்த காலத்திலும் முத்தலாக் முறை கடைபிடிக்கப்பட்டு வருவது பெண்கள் உரிமையை பறிக்கும் செயலாகும்.

தற்போது சமூக வலைதளங்களிலும் #TalktoAMuslim என்ற ஹாஸ்டாக் வைரலாகி வருகிறது. இதனை உணர்ந்து பெண்கள் மீதான அடக்குமுறையை ஏவும் இது போன்ற செயல்களை ஒடுக்கி, பெண்கள் வாழ நல்லதெரு சமூகத்தை ஏற்படுத்தி கொடுக்க முயல வேண்டும்.

Tags
Show More
Back to top button
Close
Close