பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு இந்த சொற்றொடர் எள்ளளவும் செயல்படுத்தப்படுவதில்லை என்பது தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் எல்லோருக்கும் உணர்த்துகின்றன. குறிப்பாக இப்போது தமிழ்நாடு தலைநகர் சென்னை புரசைவாக்கத்தில், காது கேட்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த ப்ளம்பர், வாட்ச் மேன் உள்ளிட்ட 17-க்கும் பேர் அக்குழந்தையை பலாத்காரம் செய்தனர் என்ற செய்தி அனைவரையும் பரப்பராக்கி உள்ளது.

அந்த மனித தன்மையற்ற தீய கும்பலை அழித்தொழிக்க வேண்டும் என்று பொது மக்களிடையேயும் குறிப்பாக பெற்றோர்களிடையேயும் ஒரே கருத்தாக இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் ஒரு சில நாட்கள் பேசும் பொருளாக இருந்துவிட்டு பிறகு எந்த விழிப்புணர்வும் யாரும் வளர்த்து கொள்வதில்லை. ஒருவர் மட்டும் பாலியல் வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்ற காலம் மாறி ஒரு குழந்தையை பத்திற்கும் மேற்ப்பட்டோர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர் என்று செய்திகள் வருவது மானுட அவமானம்.

குழந்தைகள் மிகுவும் மென்மையான மனம் கொண்டவர்கள். எது எது தவறு என்று தெரியாத பிஞ்சு உள்ளங்களை நஞ்சு மனங்கொண்ட நாசக்கார கும்பல் சீரழிப்பது தொடர்க்கதையாகி உள்ளது. இதற்கு எல்லாம் விடிவுக்காலம் இல்லையா என்று பெற்றோர்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். சென்னை காது கேட்பதில் பிரச்சனை உள்ள ஒர் சிறுமையை பல நாடகள் பாலியல் சித்தரவதை ச் செய்திருப்பது அனைவர் மனதையும் ஸ்தம்பிக்க ச் செய்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து இருந்த லிப்ட் மேன், ப்ளம்பர், காவலாளி என 17 பேர் ஏழு மாதக்காலமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளதாக பாலிமர் நியூஸ் செய்திக்குறிப்பு கூறுகிறது.மயக்க ஊசிச்செலுத்தியும், பாலியல் சித்தரவதைச்செய்ததை வீடியோ எடுத்து அச்சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அக்குழந்தையின் சோர்வு சோகம் ஆகியவற்றை கண்டுபிடிக்காமல் இருந்து இருக்கின்றனர். வெளியூரில் தங்கிப்படிக்கும் அச்சிறுமியின் சகோதரி சோர்வுக்கான காரணத்தை கேட்டுள்ளார். காது கேட்க முடியாத அந்த சிறுமி நடந்தவற்றை கூறியிருக்கிறார். பதறிப்போய் பெற்றோர் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை நடத்திய விசாரணை நடத்தியது. சிறுமிக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு வாக்கு மூலமும் பெறப்பட்டுவிட்டது. சிறுமி அடையாளம் காட்டியதில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள நான்கு ஊழியர்களையும் காவல்துறை தேடி வருகிறது.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்கானிக்க வேண்டும். சோர்வு அடையும் போது குழந்தைகளிடம் அன்பாக பழகி அதற்கான காரணத்தை அறிதல் அவசியம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அன்றைய பொழுதை பற்றியும் சந்தித்த நபர்கள் பற்றியும் அரை மணி நேரம் பேசி தெரிந்து க்கொள்ள வேண்டும். பேச வரும் குழந்தைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்க வேண்டும். குழந்தைகளிடம் நட்புள்ள பெற்றோர்களாக பழகுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகிறது.

Share