நாட்டில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது, வாடிக்கை ஆகிவிட்டது.

அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், பேரிடர் காலங்களில் பணம் கொடுத்தால் தான் ஹெலிகாப்டரில் பொது மக்கள் தப்பிக்க முடியும் என்ற உண்மைக்கு புறம்பான செய்தியை A.N.I செய்தி நிறுவனம் முதலில் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து முன்னணி ஊடகங்கள் தொடங்கி தீக்கதிர் போன்ற இணைய செய்திகள் வரை அனைத்து ஊடகங்களும் போலி செய்தியை வெளியிட்டன. இந்த போலி செய்திகளை ஆதாரமாக வைத்து கொண்டு, சமூக ஊடகங்களில் பொய் மீம்ஸ்-களும், தகவல்களும் பரப்பப்பட்டன.

பிறகு, இந்த செய்தி உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று, உத்தரகாண்ட் முதல்வர், திரு. த்ரிவேந்திர ராவட் ட்விட்டரில் பதிவிட்டார்.

உண்மை செய்தி யாதெனில், பேரிடர் அல்லாத காலங்களில், உபயோகபடாமல் நின்று கொண்டிருக்கும் ஹெலிகாப்டர்களை, பொது மக்கள், போக்குவரத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தற்சுலா முதல் குஞ்சி பகுதி வரை சென்று திரும்புவதற்கு ₹3500 என்று கட்டணம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது. உள்ளூர் வாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த கட்டணம் குறைக்கப்பட்டு, ₹2500 என்று, முதல்வர், திரு. த்ரிவேந்திர ராவட் உத்தரவிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றோர்களே, போலி செய்திகளை வெளிப்படையாக தோலுரித்து காட்டும் நிலைமை, ஊடக தர்மத்தின் மீது படிந்துள்ள பேரழுக்காக கருதப்படுகிறது.

Share